Saturday, April 18, 2026

சிவகார்த்திகேயன் என்னை பார்த்து வளர்ந்தவர், அவருடன் போட்டியா?. ஓபன்னாக பேசிய ஜீவா!!

ஜீவா:

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சங்களில் நடித்து வருபவர் தான் ஜீவா. சமீபகாலமாக அவர் நடிப்பில் படங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு வெளியான black என்ற படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். தற்போது ஜீவா நடிப்பில் பா விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள அகத்தியர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

22 வருட சினிமா பயணம்:

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ஜீவா, பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், என்னுடைய 22 வருட சினிமா பயணத்தில் பல இயக்குனர்கள் உடன் பணியாற்றிவிட்டேன். அதன் மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது. ஒரு படத்தின் ஷூட் முடித்த பிறகு வீட்டுக்கு போகும் போது கஷ்டமாக இருக்கும். ஆனால் என்னுடைய படங்கள் அதிகம் ட்ராவல் படங்களாகவே இருக்கும். ஒரு நடிகராக என்னுடைய படங்கள் திரும்பி பார்க்கும் போது 10 படங்கள் ஐகானிக்காக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.

அகத்தியா திரைப்படம் என்னுடைய திரைப்பயணத்தில் மிக பெரிய பட்ஜெட் படமாக இருக்கிறது. நான் எப்போதும் பெரிய பட்ஜெட் படங்கள் பண்ணமாட்டேன். தயாரிப்பாளர் மகன் என்பதால் அந்த விஷயத்தில் கொஞ்சம் பயம் இருக்கும். ஒரு படம் நன்றாக ஓடினாள் நிறைய தைரியம் வரும், ஓடவில்லை என்றால் மீண்டும் கற்றுக்கொள்ளும் நிலைமைக்கு சென்றுவிடுவோம். இதை எப்படி கம்பேக் கொடுக்கலாம் யோசிப்போம். தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. வெற்றிக்கான வழியும் அது தான்.

Secrets We Keep (Web Series) தரமான த்ரில்லர் கதை – தமிழ் திரைவிமர்சனம்!!

மம்மி, மேட்ரிக்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அந்த படங்களை பார்த்த பிறகு அனிமேஷன் கற்றுக்கொள்ள வேண்டும் ஆர்வம் இருந்தது. அப்படி தான் நான் சினிமாவில் வந்தேன். கடைசியாக நடிகராக மாறிவிட்டேன். இப்போது அந்த மாதிரி படத்தில் நடித்து இருக்கிறேன்.

மேலும் அவர் பேசுகையில், இப்போது எல்லாம் நடிகர்கள் கூட போட்டி இல்லை, நடிகர்களின் மார்க்கெட்டிங் டீம் உடன் தான் போட்டியே. அவங்க ரொம்ப ஒர்க் பன்றாங்க.

போட்டியா?

சிவகார்த்திகேயன் முதல் முறை என்னை பார்க்கும் போது, அண்ணா, உங்களுடைய படங்கள் எல்லாம் பர்ஸ்ட் நாள் பார்த்து இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அவர்கள் என்னை இன்சிபிரஷனாக பார்த்து இருக்கிறார்கள். நம்முடைய படத்தை பார்த்து தான் வந்து இருக்கிறார். எனக்கு insecurity கிடையாது.

ரவி, சிம்பு, தனுஷ் நானும் ஒரே காலகட்டத்தில் இருந்து வந்தோம். இவர்கள் கூட போட்டியே. நான் சிவகார்த்திகேயன் போட்டியா பார்க்கவில்லை. என்றேண்டும் புன்னகை படத்தில் சிவகாத்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை.. அதே போல விஜய் சேதுபதியும் நிறைய படங்கள் நடித்தார். நான் அறிமுகப்படுத்திய இயக்குனர்கள் தான் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வைத்து இப்போது படம் பண்ணுகிறார்கள் என்று ஜீவா தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles