விஜே ரம்யா:
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விஜே ரம்யா. இவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து சில படங்களில் நடித்து வந்த விஜே ரம்யா சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி படத்தில் வில்லி ரோலில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பேட்டி:
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விஜே ரம்யா, நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.. அதில் அவர் பேசுகையில், பெண்கள் 18 – 25 வயதில் எவ்ளோ தான் ஸ்டார்ங்காக இருந்தாலும், அந்த வயதில் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால், இப்படி ஆகிறோம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இதெல்லாம் சமூகத்தின் pressure தான். 100 பேர் இருக்கிறார்கள், அதில் 90 பேர் திருமணமானவர்கள் 5 பேர் திருமணமாகி பிரிந்து வாழ்ந்து வருபவர்கள், 5 பேர் திருமணமே செய்ய கூடாது என்றால் மனநிலையில் இருப்பார்கள். இதில் 90 பேரை இந்த சமூகம் விட்டுவிடும் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதை கண்டுகொள்ளாது. மீதி இருக்கும் 10 நபர்களை தான் பாத்துகொண்டே இருப்பார்கள். இப்படி சிங்களாக இருப்பதில் ரொம்ப சந்தோஷமான விஷயம். அதற்கு தைரியம் வேண்டும்.
முன்பு எல்லாம் விவாகரத்து என்றால், அய்யோ கடுவுளே என்று சொல்வார்கள். ஆனால் இப்போது அது சாதாரண செய்தியாக மாறிவிட்டது. அதே அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க வாழ்ந்துகொள்ளலாம். திருமணம் ஆனாலும் சரி, தனியாக இருந்தாலும் சரி. உங்களுக்கு எப்போ வேணாலும் திருமணம் பண்ணிக்கலாம் .
தனி ஆளாக தான் இந்த உடற்பயிற்சி மையத் தை ஆரம்பித்தேன். உதவிக்கு ஆள் இல்லை. பொருள் வாங்குறதாக இருக்கட்டும், கணக்கு வழக்கு பார்ப்பது. அதுமட்டுமின்றி சில போஸ்டர்கள் தயார் செய்துவது என பல வேலைகள் ஒரே ஆளாக செய்து முடிக்கிறேன்.
நான் தினமும் உடற்பயிற்சி செய்வேன். சிலநாட்கள் மிஸ் ஆனால் கூட கஷ்டமாக இருக்கும். மேலும் இரவு 9 மணிக்கு தூங்க சென்றுவிடுவேன் காலையில் 4 மணிக்கு எழுந்திருவேன். அதற்கு காரணம் காலையில் 4 மணிக்கு எழும் போது எனக்குள் பாஸ்டிவிட்டி கிடைக்கிறது.. என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் வருகிறது. அதனால் தான் நேரத்தில் எழுந்துவிடுவேன்.
யோகா சோம்பா போன்ற உடற்பயிற்சி செய்தும் என்னுடைய உடம்பு சரியான அமைப்பில் இல்லை. ஏதோ ஒரு உடற்பயிற்சி செய்வேன். டயட் பின்பற்றுவேன், திரும்ப வெயிட் கம்மி யாகும்.கொஞ்சம் நாள் கழித்து வெய்ட் போடும் என்ன காரணமே தெரியாது.



