விடாமுயற்சி:
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் அஜித் குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இப்படத்தில் அர்ஜுன், ரெஜினா, திரிஷா, விஜே ரம்யா,ஆரவ் எனப் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். அனிருத் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டி:
இந்நிலையில் பேட்டி ஒன்றில் ரம்யா விடாமுயற்சி படம் குறித்து பேசியுள்ளார். அதில் அஜித் குமார் மற்றும் மகிழ் திருமேனி படங்களில் பெண்களை கன்னியமாக தான் காட்டுவார்கள். அதனால் தான் அவர்களுடைய படத்தில் நடிக்கும் எனக்கு எதுவும் பயம் இல்லை. எப்போதுமே எனக்கு அது தான் முக்கியம். நான் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பதை காட்டிலும், யார் அந்த படத்தை எடுக்கிறார்?, அங்க யார் பணியாற்றுகிறார்? அந்த டீம் நமக்கு செட் ஆகுமா? ஒத்துபோகுமா என்பதை தான் முதலில் பார்த்தேன்.
Secrets We Keep (Web Series) தரமான த்ரில்லர் கதை – தமிழ் திரைவிமர்சனம்!!
விடாமுயற்சி படம் தொடர்பாக மகிழ் சார் எனக்கு அழைத்தார்.அவர் முதல் சொன்ன விஷயமே இது தான் அந்த கதாபாத்திரம், அந்த கதாபாத்திரத்தின் படத்தில் அளவு நேரம் கம்மியாக தான் இருக்கும். ஆனால் மிக பெரிய முக்கியவந்தாக இருக்கும். இந்த படத்தில் பெண்கள் ரொம்ப கம்மி அதனால் நீங்களும் பேசப்படுவீர்கள். அதுவும் அஜித் சார் படம். இந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசனை செய்துகொண்டு இருந்தோம். இந்த கதாபாரத்திற்கு நீங்கள் தான் சரியா இருப்பீர்கள். எங்களை நம்பி படம் பண்ணுவீங்களா? என்று கேள்வி கேட்டார்கள்.

நானும் நம்பி பண்ணேன். தியேட்டரில் படம் பார்க்கும் போது ரொம்ப பயந்துகொண்டு இருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை . இது தொடர்பாக மகிழ் திருமேனி சாருக்கு நன்றி சொல்லி ஒரு மெசேஜ் செய்து இருந்தேன். அஜித் சாருக்கும் மகிழ் திருமேனி சாருக்கும் மிக பெரிய நன்றி. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ரெஜினா நானும் எடுத்துக்கொண்டு புகைப்படம் இந்த படத்தில் வில்லியாக காட்ட பயன்பட்டுள்ளது. எதிர்பார்க்காமல் சில விஷயங்கள் நடப்பது தான் வாழ்க்கையை அழகாக காட்டும். எனக்கு இப்படி தான் அமைந்தது. அஜித் சாருடன் இணைந்து படம் பண்ணுவேன் என்று நினைத்துகூட பார்த்ததில்லை.மகிழ் திருமேனி சாரு கூட பணியாற்றுவேன் நினைக்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
அவர்கள் பெரிய ஆட்களாக இருந்தாலும் செட்டுக்கு வந்து பிறகு அவர்களுடன் சாதாரணமாக தான் பேசவேண்டும். நண்பர்கள் கூட எப்படி பேசுவோம் அந்த மாதிரி தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.. அஜித் சார் மகிழ் சார் நிறைய ரிஹர்சல் பார்க்கலாம் என்று சொன்னார்கள். அது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது. படத்தில் முக்கியமான தருணம் இருந்தது, அந்த கட்டிபிடிக்கும் காட்சி. அதை எப்படி எடுக்கலாம், நீங்கள் சொல்லுங்க அதை எப்படி எடுக்கலாம்? என்று என்னிடம் கேட்டார்கள். அந்த காட்சியை அடுத்த நாள் தான் எடுத்தோம். இதனால் எனக்கு கம்ஃபர்டபிளாக இருந்தது என்று விஜே ரம்யா தெரிவித்துள்ளார்.




