வாணி போஜன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் வாணி போஜன். மாடலிங் செய்து வந்த இவர், ‘ஆஹா’, ‘மாயா, தெய்வமகள்’, லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இருப்பினும் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. சின்னத்திரை நயன்தாரா என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். தெய்வமகள் சீரியலுக்கு பிறகு வாணி போஜன் சினிமா வாய்ப்புகள் வர தொடங்கியது.
கடந்த 2020ம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். இந்த படத்தில் வாணி போஜன் இரண்டாம் ஹீரோயினாக நடித்திருந்தாலும், இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் இவர் ஒரு சில காட்சிகள் நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் படக்குழு வாணி போஜன் இடம் பெற்ற காட்சிகளை நீக்கிவிட்டது.

இதனை தொடர்ந்து லாக்கப், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மிரல், லவ், அஞ்சாமை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது கேசினோ, ஆர்யன், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
மேலும் சில வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
பேட்டி
இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட வாணி போஜன், சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி வரும் ட்ரோல்கள் மற்றும் தவறாக புகைப்படங்களை சித்தரிப்பது குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர், நான் நடிச்ச எல்லா நடிகர்களோடவும் என்னை தவறாக தொடர்பு படுத்திப் சமூக வலைத்தளங்களில் பேசுகிறார்கள். என்னோட பக்கத்தில் நின்ற போட்டோகிராஃபரையும் என்னையும் கூட சேர்த்து வைத்து தவறாக பேசினார்கள். அதுமட்டுமின்றி அந்த போட்டோகிராஃபருக்கும் எனக்கும் திருமணம் ஆகிவிட்டது என்றும் சொன்னார்கள். பாவம் அவர், அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. இப்போது அவருடைய குடும்பம் என்னை திட்டுகிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல், நான் சமூக வலைத்தளங்களில் போன்ற போட்டோவை பார்த்துவிட்டு, “வாய்ப்பு கிடைக்கல போல” பட வாய்ப்பு குறைய குறைய பட வாய்ப்பு அதிகமாக வரும் என்று கேவலமாக கமென்ட் செய்கிறார்கள்.
ஒரு நடிகையாக பிரபலமாக இருக்க விதவிதமாக போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறோம். ஆனால் அந்த புகைப்படங்களை தவறாக சித்திரித்து வைரல் ஆக்குவதை வேலையை வைத்து இருக்கிறார்கள். இந்த மாதிரி நடிகைகளுக்கு மட்டும் தான் நடக்கும். நடிகர்களுக்கு அப்படி நடக்காது என்று வாணி போஜன் கூறியுள்ளார்.




