சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் மிக பெரிய வெற்றி கொடுத்தது.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், நடிகர் சிவகாத்திகேயன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தான் முதலில் வெளியாகும். இருப்பினும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பராசக்தி திரைப்படம் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. மதராஸி படத்தின் ஷூட்டிங் 15 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அமரன் படத்திற்கு முன்பே சிவகார்த்திகேயனை ஆக்ஷன் ஹீரோவாக முதல் முதலில் மாற்றானும் என்று நினைத்தது ஏ ஆர் முருகதாஸ் தான். இதுவரை இல்லாத performance கொடுக்கணும், rugged லுக்கில் இருக்கனும் ஜிம் போங்க என்று சிவகார்த்திகேயனை மாற்றியது சிவகார்த்திகேயன். அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் காமெடியாக நடித்திருக்கிறார், சீரியஸ் ரோலில் நடித்து இருந்தார்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் திரைப்படம் தான் படு தோல்வியை அடைந்தது. அதற்கு முன்பு மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படம் தோல்வி அடைந்தது. இந்த இரு படங்கள் தான் ஏ ஆர் முருகதாஸ் கேரியரில் சறுக்கல்களாக அமைந்தது. இப்பவும் ஓடுகின்ற குதிரை தான்.
பராசக்தி திரைப்படம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடும் கல்லூரி மாணவர்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. தீவிர அரசியல் படம்கா இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் இருந்து வரும் போது எதோ சாதாரண ஹீரோவாக தான் வருவார் என்று நினைத்தோம். அவரே அவர் உருவாக்கி வந்து இருக்கிறார். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனை மாற்றியது ஆர். டி. ராஜா தான். ஆரம்பத்தில் சந்தானம் போல காமெடி நடிகராக மாற சிவகார்த்திகேயன் நினைத்துள்ளார். அதே போல ஒரு படத்திற்கு காமெடியனாக நடிக்க அட்வான்ஸ் வாங்கி வந்து இருக்கிறார். ஆனால் நீ நடித்தால் ஹீரோவாக நடிக்கணும் என்று சொல்லி அவரை மாற்றினார். ஒரு பெரிய ஹீரோவுக்கு எப்படி ஆடியோ லான்ச் பண்ண வேண்டும், ப்ரோமோஷன் பண்ண வேண்டும் என்று ஆர். டி. ராஜா தான் செய்தார்.
90 கோடி:
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சதா வளர்ச்சியாக இல்லை அசுர வளர்ச்சியாக இருக்கிறது. மேலும் அவர் தன்னுடைய சம்பளத்தையும் விட்டுக்கொடுத்து கடன் கட்டி படத்தை வெளியிட்ட ஒரே நடிகர் சிவகார்த்திகேயன் தான். 90 கோடி கடன் இருந்தால் ஒருவர் செத்து போயிருவேன் ஆனால் சிவகார்த்திகேயன் இவ்ளோ கடன் இருந்து சினிமாவில் கஷ்டப்பட்டு படத்தில் நடித்து இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். அமரன் படத்தில் வெற்றி விழாவின் போது கூட இந்த படத்திற்கு தான் முழு சம்பளம் வாங்கினேன் என்று சொல்லி இருப்பார். ஒரு ஒரு படம் வெளியாகும் போது மதுரை அன்பு வீட்டில் தான் இருப்பேன் என்று சிவகார்த்திகேயன் ஓபன்னாக பேசியிருந்தார். அவர் நகைச்சுவகைக்கா பேசவில்லை. மனதில் இருந்து பேசினார் என அந்தணன் கூறியுள்ளார்.