எந்திரன்
கடந்த 2011 ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படம் உலக அளவில் வெற்றிப்படமாக அமைந்தது. பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான இந்த படம் ஹாலிவுட் லெவெலுக்கு தரமான ஆக்ஷன் காட்சிகளை எடுத்திருந்தனர்.
எந்திரன் படம் ஒரு பக்கம் பல பாராட்டுக்கள் பெற்று இருந்தாலும், சில சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அது என்னவென்றால், எந்திரன் படத்தின் கதை என்னுடைய தான் என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்து இருந்தார். தற்போது இந்த வழக்கு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

10 கோடி சொத்து?
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சுபைர், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் ஷங்கர். இப்படி இருக்கும் சூழலில், ஆரூர் தமிழ்நாடன் நக்கீரன் இதழில் ஆசிரியராக இருக்கிறார், மேலும் இனிய உதயம் பத்திரிக்கைகளில் இவர் எழுதிய கதையின் ஜும்பா. இது ரோபோடிக்ஸ் குறித்து பேசும் கதை. கடந்த 2011ம் ஆண்டு எந்திரன் படம் வெளியானது. அதை பார்த்த, ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் படத்தின் கதை என்னுடையது என்று வழக்கு தொடருகிறார். இந்த வழக்கு 15 வருஷமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரித்தவர் கலாநிதி மாறன். ஆனால் இந்த வழக்கில் இருந்து கலாநிதி மாறன் விடுவிக்கப்படுகிறார். கிட்டத்தட்ட 15 ஆண்டு இந்த வழக்கு தொடர்ந்து வருகிறது. இந்த வழக்கால் ஷங்கரின் 10 கோடியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சமீபத்தில் நடந்த காப்பி ரயிட்ஸ் சட்டதிருத்தங்கள் கொண்டு வந்துள்ளனர்.கதை திருட்டு வழக்கு உறுதி செய்யப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்படும். இதனால் தான் ஷங்கரின் 10 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஷங்கர் தரப்பில் இருந்து, நாங்கள் யோசித்த கதையும், இந்த கதையும் ஒரே மாதிரி இருக்கிறது என்ற வாதத்தை நிதிமன்றத்தில் வைக்கிறார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிபுணர்கள் வைத்து இந்த இரண்டு கதையும் விசாரிக்க கூறியிருந்தார். அதில், படத்தில் இடம்பெற்றுள்ள 16 காட்சிகள் ஒரே மாதிரி இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஷங்கரின் இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற நல்லவரவேற்பு கிடைக்கவில்லை. தொடர் தோல்விகள், இந்த பிரச்சனை காரணமாக ஷங்கர் மனஅழுத்தத்தில் இருக்கிறார்.
கதை சார்ந்த பிரச்சனைகள் இணைக்கு நேற்று நடக்கவில்லை, பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை நடந்து வருகிறது. அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை படத்திற்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் வந்தது என்று சுபைர் தெரிவித்துள்ளார்.



