சூர்யா
இந்திய அளவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் சூர்யா. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்புடன் உருவானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படத்திற்கு மோசமான விமர்சனமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்ததது. இப்படம் திரையில் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி, சூர்யா வின் வாடிவாசல் படம் குறித்து பல விஷயங்களைஇ பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், வாடிவாசல் படம் வந்துவிடும் என்று சொல்லிகொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் சூர்யா, வெற்றிமாறன் இடையே பிரச்சனை சென்றுகொண்டு தான் இருக்கிறது. வாடிவாசல் படத்தில் அமீர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே சூரியா அமீர் இடைய தனிப்பட்ட பகை ஒரு பக்கம் இருக்கிறது. இந்த படத்தில் இருந்து அமீரை நீக்குமாறு நேரடியாக வெற்றிமாறன் இடம் சொல்ல முடியாமல் இருக்கிறார் சூர்யா. இது தொடர்பாக வெற்றிமாறன் இடம் சொல்ல பயப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் இதை சொல்ல தயக்கமும் இருக்கிறது. ஞானவேல் ராஜா மூலமாக வாடிவாசல் படத்திற்கு அமீர் வேண்டாம் என்று தூது அனுப்பி இருக்கிறார் சூர்யா. ஆனால் இதற்கு வெற்றிமாறன் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
அமீர் கூட பிரச்சனை இருப்பதால் செட்டில் ஒன்றாக இருக்க அவர்களால் முடியவில்லை. எதாவது பண்ணி படத்தில் இருந்து அவரை தூக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இதனால் இந்த படத்தில் இருந்து சூர்யா அவரே விலகுவார், இல்லை என்றால் வெற்றிமாறன் படத்தில் இருந்து தூக்கிவிடுவார்.

அப்டேட்
அமீர்-க்கு சூர்யா குடும்பத்திற்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து இருக்கிறது. சூர்யா குடும்பம் சார்பாக ஞானவேல் ராஜா பேசிய வார்த்தைகள் அமீரை ரொம்ப காயப்படுத்தியது. அவருடைய மோசமான பேச்சை சூர்யா குடும்பத்தினர் கண்டிக்கவில்லை என்ற வருத்தமும் அமீர் இடம் இருக்கிறது. அமீர் ஈகோ உள்ள ஆள் தான்.
மேலும் அவர் பேசுகையில், குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த படத்தை மே மாதத்தில் வெளியிட அஜித் குமார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்திற்கு கலவையான விமர்சனம் வந்த பிறகு மகிழ் திருமேனி பழியை தூக்கி அஜித் குமார் மீது வைக்கிறார். படத்தின் கதை என்னுடையது
அல்ல அஜித் குமார் உடையது என்று சொல்லி தப்பிக்கிறார். ஆனால் இதுவே படம் நன்றாக இருந்தால் அவர்களே எடுத்துக்கொண்டு இருப்பார்கள் என்று பிஸ்மி கூறியுள்ளார்.



