சிவகார்த்திகேயன்
குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மாறியிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் மிக பெரிய வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வெற்றி விழா குறித்து பேசியுள்ளார். அதில் அவர்., பல பேர் இரண்டாம் நாளே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். அதற்கு காரணம் கேட்டால் இப்போது எல்லாம் படம் வெளியாவதே பெரிய விஷயமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் அமரன் படம் 100 வது நாள் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். இப்போ எல்லாம் எந்த படமும் 100 நாள் ஓடுறது இல்ல சும்மா சொல்லிக்கலாம். இருந்தாலும் அமரன் படம் மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஓடி மிக பெரிய வெற்றியை பெற்றது. உள்ளூர் மட்டுமின்றி உலக அளவில் படம் ஹிட் தான். அதனால் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

கடன் பிரச்சனைகள்
இந்த நிகழ்ச்சியில் கமல் ஹசான் பேசியிருந்ததை விட சிவகார்த்திகேயன் பேசியிருந்தது ரசித்து பார்த்தேன். அந்த மேடையில், இந்த படத்திற்கு தான் முழுமையான சம்பளத்தை வாங்கினேன். அதற்கு கமல் ஹாசன் சாருக்கு ரொம்ப நன்றி என்று சொல்லி இருந்தார். அதற்கு காரணம், அவருடைய ஒவ்வொரு படம் வெளிவந்த பிறகும், முந்தைய படங்கள் தோல்வி அல்லது அந்த படத்திற்காக வாங்கிய கடன் போன்று சில நெருக்கடிகள் விழும். தயாரிப்பாளர் மீது கடன் பிரச்சனைகள் வந்தாலும் பரவலா, அதை பாற்றுக்கொள்ளாம் போராட்டத்தை சந்தித்து கொண்டு இருந்தார் சிவகார்த்திகேயன் . ஆனால் அமரன் படத்தில் அந்த மாதிரி பிரச்சனைகள் எதுவும் வரவில்லை.
என்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும் போது நான் மதுரை அன்பு வீட்டில் தான் இருப்பேன் என்று சிவகார்த்திகேயன் மேடையில் கலகலப்பாக பேசியிருப்பார்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி படத்தில் வேறொரு சிவகார்த்திகேயன் பாக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அமரன் படத்திற்கு முன்பே ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் படம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றினார். ஆனால் அதற்குள் அமரன் படம் வந்தது. தற்போது மதராஸி படம் இரண்டு நாள் ஷூட்டிங் நடந்துகொண்டு இருக்கிறது. முதல் முதலில் சிவகார்த்திகேயனை ஆக்ஷன் ஹீரோவாக மாற்ற வேண்டும் என்று அதற்கான முயற்சிகள் எடுத்தது ஏஆர் முருகதாஸ் தான். ஆனால் சிவகார்த்திகேயன் பல படங்களின் தலைப்புகள் தேடி தேடி வைப்பு தவறு. பராசக்தி மிக பெரிய படம் அந்த படம் தலைப்பு வைப்பது தவறான ஒன்று என பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.



