விக்னேஷ் சிவன்:
சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன். இப்படம் எதிர்பாத்த வெற்றியை தரவில்லை. அதன் பின்னர் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த விக்னேஷ், சினிமாவில் பாடல் ஆசிரியராகவும், போஸ்டர் டிசைனராகவும் படங்களில் பணியாற்றி வந்தார். இதனை அடுத்து விஜய் சேதுபதியை வைத்து நானும் ரௌடி தான் என்ற படத்தை இயக்கினார். இப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் தான் விக்னேஷ் சிவன்,நயன்தாரா இருவரும் காதலித்தனர். பல வருடங்கள் காதலித்து வந்த இவர்கள், கடந்த 2022 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சமீப நாட்களாக அவர்கள் இரண்டு பேருமே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறார்கள்
சர்ச்சை:
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நயன்தாரா, கெட்டதை பார், கெட்டதை கேள், கெட்டதை மட்டுமே பேசு என சொல்லும் 3 மோசமான குரங்குகள் என்னை குறித்து தொடர்ந்து யூடியூப் பக்கத்தில் பேசி வருகிறார்கள். அவர்கள் பதிவிட்ட 50 வீடியோவில், 45 வீடியோவில் என்ன பற்றித்தான் பேசி இருப்பார்கள். என்னை பற்றி பேசி பணம் சம்பாதிக்கிறார்கள் என்று வலைப்பேச்சு யூடியூ பக்கத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு வலைப்பேச்சு சேனலும் தகுந்த பதிலடி கொடுத்து இருந்தார்.
அதுமட்டுமின்றி சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன், புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாய் மாறிய நிலையில், அதனை மறுத்து விக்கி விளக்கமளித்திருந்தார்.

பேட்டி:
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி விக்னேஷ் சிவன் குறித்து பேசியிருக்கிறார்.அதில் அவர்,”கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் வேலை செய்தவர்தான் விக்னேஷ் சிவன். பல மாதங்கள் அவரது வீட்டில்தான் விக்னேஷ் சிவன் தங்கியிருந்தார் என்று தெரிவித்து இருக்கிறார். தற்போது இந்த தகவல் காட்டு தீ போல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.



