விடுதலை
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான விடுதலை படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தனர். காமெடி ரோல்களில் கலக்கி வந்த சூரி விடுதலை படத்தில் ஹீரோவாகா நடிப்பதால் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்த்தது போல இப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படமாக இருந்தது.
இப்படத்தில் கனிமவளம் திருடும் அரசுக்கு எதிராக விஜய் சேதுபதி, மலைவாழ் மக்களை ஒன்று திரட்டி இயக்கத்தை அமைத்து செயல்பட்டு வருகிறார். இதை ஒடுக்க அரசு முயற்சி செய்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் காவல் துறையில் பணியாற்றும் சூரி அந்த மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார.

ஒரு கட்டத்தில் சூரி, பெருமாள் வாத்தியாரை பிடித்து கொடுக்கிறார். பெருமாள் வாத்தியார் யார்.. எப்படி புரட்சியாளராக மாறினார் என்பதை படத்தின் இரண்டாம் பாகமாக எடுத்து இருந்தனர். பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள விடுதலை 2 ம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர், சேத்தன், கௌதம் மேனன், கென் கருணாஸ் எனப் பல பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, இன்று மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிடப்பட்டன.
தற்போது விடுதலை 2 படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வரும் நிலையில், படத்தின் டிக்கெட் புக்கிங் மதியம் ஒரு மணி நிலவரப்படி 2.58 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் ரூபாய் 23 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் பாகம் அதை விட அதிகமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
டுகிறது. இதனால், படத்தின் முதல் நாள் வசூல் 3 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை முதல் பாகம் 23.85 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் பாகம் அதைவிட நல்ல வசூலை அள்ளும் என நம்பப்படுகிறது.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மஹாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து உலக அளவில் வசூல் சாதனையை படைத்து வருகிறது. அதே போல விடுதலை 2ம் பாகமும் வசூல் வேட்டையை நடத்தும் என்று சொல்லப்படுகிறது.




