விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தொடர்ந்து அஜித் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி உடன் கூட்டணி வைத்து இருந்தார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் எனப் பல பிரபலங்கள் கமிட் ஆனார்கள். முதலில் நீரவ் ஷா சில நாட்கள் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.அதன் பின்னர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் படத்தில் கமிட் ஆனார்.மேலும் படத்தில் ஆர்ட் டைரக்டர் மிலனும் உயிரிழந்தார். இதனால் படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது.
இப்படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைத்து இருந்தாலும்,படத்தை விரைவில் எடுத்து முடிக்க எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்துவந்தது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. டீசரில் எந்தவிதமான வசனமும் இல்லையென்றாலும் மகிழ் திருமேனியின் மேக்கிங், அஜித்தின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் ஆகியவை வேற லவலில் இருந்தது. இருந்த போதிலும் சில பொதுவான ரசிகர்கள் டீசருக்கு கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தனர்.
இந்த சூழலில் விடாமுயற்சி திரைப்படம், ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இதனால், பிரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 150 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு லைகா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதனால் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன்விடாமுயற்சி திரைப்படம் தாமதம் ஆகுவதை பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர், விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்கிற திரைப்படத்தின் தழுவல்தான். இதனால் அந்த படத்தின் கதை உரிமையை வாங்க பிரபல லைக்கா நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது. ஆனால் லைக்கா நிறுவனம் உரிமம் கொடுக்க முன்வரவில்லை. அதன் பின்னர் விடாமுயற்சி படத்தை பார்த்த பிறகு உரிமை தொகை குறித்து பேசலாம் என்று ஹாலிவுட் பட நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. அதன்படி படமும் பிரேக் டவுன் குழுவுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை என்பதால் அந்த மெயிலுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவில்லை. இந்த காரணத்தால் தான் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது என்று சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.




