Monday, March 2, 2026

வேணும்னே விடாமுயற்சி படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் செய்கிறார்கள்.. உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்!!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் கடந்த 6ம் தேதி வெளிவந்த விடாமுயற்சி படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அஜித் விடாமுயற்சி படம் குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், தமிழ் நாட்டில் மட்டும் விடாமுயற்சி திரைப்படம் ரூபாய் 25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த விஷாலின் மத கத ராஜா திரைப்படம் மொத்தமாக ரூ. 60 கோடிக்கு மேல் வசூல் செய்தது ஆனால் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் மூன்று நான்கு நாட்களில் ரூ. 60 கோடிக்கு மேல் வசூல் செய்துவிடும். அஜித்துக்கு தனி மார்க்கெட் இருக்கிறது. சில நடிகர்களின் படம் அப்படியே போய்க்கொண்டு இருக்கும். குறிப்பாக விஜய் சாரின் படம் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று கொடுத்தது. விடாமுயற்சி படத்திற்கு கலவையான விமர்சனம் வருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மகிழ் திருமேனி பல பேட்டிகளில் வழக்கமான அஜித் படம் போல இருக்காது என்று சொல்லி இருப்பார்.

சிலர் தனிப்பட்ட காரணத்திற்காக படத்தை வேண்டுமேன்றே மோசமான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். எப்படியாவது படத்தை தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் நடந்துகொள்கிறார்கள். படத்தை விமசர்னம் செய்யலாம் ஆனால் படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் படத்தை டேமேஜ் செய்கிறார்கள். படம் நல்ல இருக்கா நல்ல இல்லையா என்பதை சொல்ல எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. அஜித் ரசிகர்கள் கோபமாக இருக்கிறார்கள், அந்த ரசிகர்கள் கோபமாக சும்மா சொல்ல கூடாது. இது படத்தை டேமேஜ் யாரையும் படத்திற்கு போக வேண்டும் என்ற சூழலை உருவாக்குகிறது.

விடாமுயற்சி படத்தை பார்த்திவிட்டு ரசிகர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று சொல்வது முற்றிலும் பொய்யான தகவல் அப்படி எதுவும் இல்லை. வார்க்கிங் நாட்களில் 9 மணி காட்சிக்கு மட்டும் 70% ஆடியன்ஸ் வந்து இருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் இன்னும் ஆடியன்ஸ் அதிகமாக வருவார்கள். ஆனால் படம் வசூல் பண்ணிட கூடாது.. படத்தின் வசூல் குறைக்க வேண்டும என்பதை நினைக்கும் போது பயமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் நிலை என்ன ஆகும் என்ற வருத்தம் இருக்கிறது.

பல பேட்டிகளில் விடாமுயற்சி படத்தில் போற வரவங்க எல்லாரும் அஜித்தை போட்டு அடிக்கிறாங்க என்று சொல்கிறார்கள். மனைவியை கடத்திட்டு போய்ட்டாங்க இந்த சமயத்தில் அஜித் அடிவாங்கி வாங்கி தான் ஆகணும் மனைவியை எப்படி காப்பாத்தணும் என்பதை யோசிக்க வேண்டும் . சண்டை போடறதா வேலை.. மனைவியை காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த விஷயத்தை மகிழ்திருமேனி பல பேட்டிகளில் அஜித் கதையின் நாயகனாக மட்டும் தான் கூறியிருந்தார். அப்படி இருந்தும் பல பேர் அஜித் படம் மாதிரி இல்லை என கமெண்ட் செய்கிறார்கள் என்று தனஞ்செயன் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles