Friday, April 17, 2026

வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள்.. மனம் திறந்த பிரபல நடிகை ஷாந்தி!!

90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ஷாந்தி. இவர் மலையாளத்தில் வெளியான நித்ரா என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து சில படங்கள் மட்டுமே நடித்த ஷாந்தி, தற்போது மலையாளத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷாந்தி, பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், நான் படித்துக்கொண்டு இருக்கும் போது தான் மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை பரதன் இயக்கி இருந்தார்.

பரதநாட்டியம் பள்ளிகளில் நடனமாடி பல விருதுகளை வாங்கி இருக்கிறேன். இந்த விஷயம் செய்திகளில் வந்தது. இதனை பார்த்த இயக்குனர் பரதன், என்னுடைய அண்ணன் சுரேஷ் சந்திராவை அணுகி, மலையாள படத்தில் நடிக்க ஹீரோயினாக வாய்ப்பு இருப்பதாக கூறினார். நானும் ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு கலைகளில் மிகவும் ஆர்வமாக இருந்தேன் அதனால் நடிக்க சரி என்று சொல்லிவிட்டேன். ஆனால் என்னுடைய அதெல்லாம் வேண்டாம்..நீ படிப்பில் கவனம் செலுத்து என்று சொன்னார்கள்.

அப்போது என்னுடைய அண்ணா அம்மாவிடம், பரதன் இந்திய அளவில் பெரிய இயக்குனர். இதனால் கோபப்பட வேண்டாம்.. அவருடைய படத்தில் நடிக்க பலரும் வாய்ப்பு தேடி கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில், ஆனால் அவரே நமக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அதுவும் பெரிய ரோல் வேற என்று சொன்னார். ஒரு வழியாக அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு தான் நாங்கள் சென்னை வந்தோம். இப்போது இருக்கிற மாதிரி ஆடிஷன் இல்லை. அந்த படத்தில் விஜய் மேனன் ஹீரோ.. 11 படிக்கும் போது பன்னீர் புஷ்பம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த படத்திலும் பள்ளி மாணவியாக நடித்திருந்தேன். மலையாளம் தமிழ் என அடுத்தடுத்து படங்களில் நடித்தேன்.

பன்னீர் புஷ்பம் படத்தில் நடிக்கும் போது பள்ளிக்கு போவது போல் இருந்தது. அந்த படத்தில் நடித்தது எனக்கு மிக பெரிய அனுபவத்தை கொடுத்தது. ஊட்டியில் ஷூட்டிங் போகும் போது ட்ரிப் மாதிரி இருந்தது. ரொம்ப இயற்கையாக இருந்தது. அந்த படத்தில் இடம்பெற்று பாடல்களும் மிகவும் அருமையாக இருக்கும், அது சூப்பரான அனுபவம்.

இதுவரை நான் பட வாய்ப்புகள் தேடி போனதே இல்லை பட வாய்ப்புகள் எல்லாமே என்னை தேடி வரும். 20 வருடம் கழித்து மீண்டும் சினிமாவில் வரலாம் என்று திட்டமிடவில்லை. என்னுடைய லைப் ஸ்டைல் மாறியது பின்னர் நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அந்த படங்களுக்கு ஓகே சொல்லவில்லை. அதன் பின் என்னுடைய வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்ட போது, எனக்கு உதவியாக இருந்தது சினிமாவே.என்று ஷாந்தி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles