Monday, March 2, 2026

கள்ளக்காதலில் திரிஷா.. படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம்!! பிரபல சொன்ன தகவல்..

விடாமுயற்சி:

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படம் நேற்று வெளியானது. அர்ஜுன் , திரிஷா, ரெஜினா எனப் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிப்பதால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் வெளிவந்தது. ஆனால் ரசிகர்கள் படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி, விடாமுயற்சி படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர், விடாமுயற்சி படத்தின் மீது எனக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை எதிர்பார்ப்பும் இல்லை. என்ன காரணம் என்றால் இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தை காப்பி எடுத்து வைத்துள்ளார்கள். இந்த தகவலை படம் வெளியாக்குவதற்கு முன்பே தெரிவித்துவிட்டோம். எனக்கு விடாமுயற்சி படத்தின் மீது கொஞ்சம் கூட எதிர்பார்ப்பு இல்லை. அந்த படத்தின் கதை ரொம்ப சின்னதாக இருக்கும். அதனால் சுவாரசியம் கம்மியாக இருந்தது. ஆனால் விடாமுயற்சி திரைப்படம் இரண்டு ஆண்டுகள் கழித்து வருவதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது.இந்த படத்தை பார்த்து முடித்த பிறகு உடைந்து போய்விடுவார்கள். இந்த படம் வெளியான பிறகு இயக்குனர் மகிழ் திருமேனியை திட்டுவார்கள் என்று ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தேன்.அதே போல படத்தை பார்த்த பிறகு நிச்சயம் மகிழ்திருமேனி திட்டி இருப்பார்கள். ஹீரோக்களுக்கு தனி இலக்கணம் இருக்கிறது. அப்படி சரியாக நடித்தால் தான் படம் ஹிட் ஆகும். அஜித் படத்தில் இப்படி நடிக்கணும், அப்படி பண்ணும் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.


தோல்விக்கு காரணம்:

விடாமுயற்சி படத்தில் அஜித் மனைவியாக திரிஷா நடித்திருப்பார். அதில் அவர், அஜித் ஒரு வேஸ்ட் என்ற முடிவுக்கு வந்து வேறொரு நபருடன் காதலில் ஈடுபடுகிறார். தமிழ் நாட்டில் திருமணத்திற்கு பிறகு வேறொரு நபருடன் காதலிப்பது கள்ளக்காதல் என்று சொல்லுவோம். அஜித் மனைவி கள்ளக்காதலில் ஈடுபடுகிறார் அந்த கதாபாத்திரம் பலவீனமாக இருக்கும். அஜித் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு காயப்படுத்தும்.

ஹீரோ என்பது இந்த நேரத்தில் இப்படி இருக்கனும், என்று ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால் இந்த படத்தில் அஜித்தை போற வரங்க எல்லாரும் அடிக்கிறார்கள். இது எல்லாம் அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும் படத்தில் சுவாரசியமான விஷயமே கிடையாது,. டிவி சீரியல் இருக்கிற மாதிரி படம் இருக்கிறது. படத்தில் மொத்தத்தில் ஒன்றுமே இல்லை. படம் நன்றாக இல்லை என்பதே வெளிய சொன்னால் மற்ற ரசிகர்கள் தங்களை கிண்டல் செய்வார்கள் என்ற எண்ணத்தில் படம் நன்றாக இருக்கிறது என அஜித் ரசிகர்கள் கூறுகிறார்கள். பிரேக்டவுன் படத்தை அப்படியே எடுத்து வைத்த கூட நன்றாக இருந்து இருக்கும் ஆனால் படத்தை சிறிது மாற்றம் செய்வதாக நினைத்து படத்தை அவியல் ஆகிவிட்டார்கள்.

ஓவர்சீஸில் விடாமுயற்சி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது உண்மை. ஆனால் படம் UA என்பதால் குடும்ப ரசிகர்கள் வரமாட்டார்கள் அதனால் வசூல் பாதிக்கப்படும். நிறைய இடங்களை படத்தை தூக்கிவிட்டார்கள் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles