Friday, April 17, 2026

தொடர்ந்து 10 படங்கள் தோல்வி, மனதில் ஏற்பட்ட அந்த வலி.. இயக்குனர் சுதீந்திரன் பேட்டி!!

சுதீந்திரன்:

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் சுதீந்திரன்.தற்போது இவரது இயக்கத்தில் 2K Love Story என்ற படம் உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.

பேட்டி:

இந்நிலையில் சுதீந்திரன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், என்னுடைய சினிமா கேரியரில் ஒரு சின்ன படம் ஒரு பெரிய படம் எனக்கு அமைந்தது. வெண்ணிலா கபடி குழு அடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை அடுத்து ராஜபாட்டை இப்படி ஒரு பெரிய சின்ன படம் என அடுத்தடுத்து வந்தது. இது என்னுடைய திட்டம் கிடையாது அதுவா நடந்தது.

தொடர் தோல்வி:

அழகர்சாமியின் குதிரை படத்திற்கு பின் தான் தோல்வி எப்படி இருக்கும் என்று புரிந்துகொண்டேன். நான் ஒரு படம் தோல்வி படம் கொடுக்க வேண்டும் நினைத்தேன். ஆனால் 10 படம் தோல்வி கொடுப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. நான் வெளியில் என்னுடைய வேலையை செய்துகொண்டு சந்தோஷமாக இருந்தாலும் உள்ளே அந்த வலி இருக்கும். நான் கத்துகிட்ட விஷயம் No compromise. என்னுடைய பர்ஸ்ட் 7 படத்தின் வெற்றிக்கு காரணம் நான் ரொம்ப பிடிவாதமாக இருப்பேன். இந்த 10 ஆண்டுகளில் என்னுடைய பிடிவாத குணம் எனக்கு தெரியாமலே போய்விட்டது. இதுவே என்னுடைய தோல்விக்கு காரணமாக அமைந்தது. மேலும் நண்பர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருப்பேன் அந்த விஷயங்களையும் மிஸ் பண்ணிட்டேன்.

நான் எப்போதும் எல்லாமே கடந்து போகும் என்ற மனநிலையில் இருக்கிறேன். எல்லா இயக்குனர்களும் அப்படி தான் இருப்பார்கள். சூரி, விஷ்ணு விஷால் வளர்ச்சி சந்தோஷமாக இருக்கிறது.வரும் வருடங்களில் நான் சினிமாவில் இல்லை என்றாலும் அவர்கள் மேடையில் ஏறும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆதலால் காதல் செய்வீர் படத்தை பார்த்துவிட்டு நிறைய பேர் அழுதார்கள். சில படைப்புகள் ஆழமாக இருக்கும். 10 படம் அடுத்தடுத்து தோல்வி கொடுத்து எனக்கு அடுத்த பட வாய்ப்பை கொடுக்க காரணம் நான் முதலில் கொடுத்த 7 படம் தான். அந்த நம்பி தான் படம் கொடுக்கிறார்கள். என்னால் நல்ல படம் கொடுக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

வெண்ணிலா கபடி குழு படத்தில் முழுக்க முழுக்க எப்படி காமெடி இருந்ததோ அதே போல இந்த படத்திலும் இருக்கும். தோல்வியின் தாக்கம் இருக்கும் போது நான் அடுத்த படத்தின் கதையை எழுத தொடங்குவேன். அப்போதும் தோல்வியின் தாக்கம் இருக்க தான் செய்யும். என்னுடைய பேனா பேப்பர் தான் இந்த 10 வருஷத்தை காப்பாற்றியது. மன பிரச்சனையாக இருக்கட்டும், உளவியல் பிரச்சனையாக இருக்கட்டும். என்னை வெளிய கொண்டுவந்தது இந்த பேனா பேப்பர் தான். எனக்கு உழைக்க பிடிக்கும், கடுமையாக உழைத்து கொண்டு இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. நான் நேர்மையாக உழைக்கிறேன். இனி தோல்வி வெற்றி வரலாம் அதற்கு தகுந்த மாதிரி என்னுடைய மனநிலை மாறிவிட்டது என்று இயக்குனர் சுதீந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles