டூரிஸ்ட் ஃபேமிலி:
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவித் இயக்கத்தில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் இன்று எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியானது. இதில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் எனப் பாலா பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது படம் குறித்து பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் வாடும் சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரம் வழியாக சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்கு தப்பிக்கின்றனர். இந்தியா வந்ததும் அவர்கள் ஒரு போலீசாரிடம் மாட்டிக்கொள்ளுகிறார்கள். ஆனால், அந்த காவல் அதிகாரி அவர்கள் நிலைமையை புரிந்து கொண்டு அனுபவத்துடன் அவர்களை விடுவிக்கிறார்.
சென்னைக்கு வந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக வாழ்க்கையை தொடங்க நினைக்கும் போது, எதிர்பாராத விதத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதனால், போலீசாரின் விசாரணையில் அந்தக் குடும்பமும் சிக்குகின்றனர்.
இந்த வெடிப்பு சம்பவத்துடன் அவர்கள் தொடர்புடையவர்களா? இல்லையா? அவர்கள் இந்த சிக்கலிலிருந்து தப்பிக்கிறார்களா என்பது தான் திரைப்படத்தின் கிளைமாக்ஸ்.

திரைப்படம் பற்றிய அலசல்:
இயக்குநர் அபிஷன் ஜீவித், தனது முதல் முழுநீள படத்திலேயே அசத்தியிருக்கிறார். ஈழத்தமிழர்களின் வாழ்வை ஆவணப்படுத்துவது போல, அவர்களின் வலியையும், வெள்ளந்தியான மனதையும் இதயத்தைத் தொடும் விதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் ஒரு சொட்டு இரத்தமோ, துப்பாக்கியோ, வன்முறையோ இல்லை. ஆனால், ஒரு குடும்பத்தின் உணர்ச்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது.
Season of the Witch 2011: திரை விமர்சனம்
சசிகுமார் மற்றும் சிம்ரன் இருவரும் தங்கள் கதாபாத்திரங்களை மிக இயல்பாக வாழ்ந்திருக்கின்றனர். ஆனால், படத்தின் உண்மையான நட்சத்திரம் ஒரு சிறுவன் கதாபாத்திரம். அவனது வெள்ளந்தியான நடிப்பும், இயல்பான நகைச்சுவையும் பார்வையாளர்களை சிரிக்கவும் அழவும் வைக்கிறது. யோகி பாபுவின் காமெடி, படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்க்கிறது. ஆர்.ஜே.ரமேஷ் திலகண்ணனின் நடிப்பு, அவரது கடந்த 10 ஆண்டு கால நடிப்பில் சிறந்த ஒரு பாத்திரமாக அமைந்திருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலம், இது ஒரு நல்ல மனிதனாக உங்களை மாற்ற முயல்கிறது. பார்வையாளர்களை சமூகத்துடன் இணைந்து, அன்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது. முதல் 15 நிமிடங்களிலேயே படம் உங்களை கதையுடன் இணைத்து, ஒரு குடும்பத்தின் பயணத்தில் உங்களையும் ஒரு அங்கமாக மாற்றுகிறது. கிளைமாக்ஸ் காட்சி, உங்கள் மனதை உலுக்கி, மனிதநேயத்தை வெளிக்கொணர்கிறது.

நெகடிவ் :
முதல் படம் என்பதால், எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவில் சிறு சிறு குறைகள் உள்ளன. ஆனால், இந்த சிறிய தவறுகள், படத்தின் ஆன்மாவையும் உணர்ச்சிகரமான தாக்கத்தையும் குறைப்பதில்லை.
ரேட்டிங்:
டூரிஸ்ட் ஃபேமிலி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல, ஒரு உணர்வுபூர்வமான அனுபவம். இது உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், மனதை நெகிழ வைக்கும்.
6.7/10



