Monday, March 2, 2026

அந்த மாதிரியான விமர்சனம் கேட்கும் போதும் கோபம் வருகிறது!! விடாமுயற்சி படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் ஆதங்கம்..

விடாமுயற்சி:

விடாமுயற்சி படம் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சுப்ரீம் சுந்தரம் பேட்டி:

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்டண்ட் கலைஞர் சுப்ரீம் சுந்தரம் விடாமுயற்சி படத்தில் பணியாற்றியது குறித்து பேசியிருக்கிறார். அதில், நான் ஹைதராபாத்தில் தான் விடாமுயற்சி படத்தை பார்த்தேன். அங்க நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தார்கள். என்னுடைய உதவி ஸ்டண்ட் கலைஞர்கலையும் அழைத்து சென்றேன். அங்க இருந்தவர்களுக்கும் படம் ரொம்ப பிடித்து இருந்தது. அஜித் குமார் வேற விதமாக படத்தில் பார்த்தோம். குறிப்பாக இந்த படம் பெண்களுக்கு பிடித்து இருக்கிறது. படத்தில் மாஸ் காட்சிகள் வைக்கவில்லை. நிறைய இயக்குனர்களும் சண்டை காட்சிகள் பார்த்து என்னை பாராட்டி இருந்தார்கள்.

குட் பேட் அக்லி படம் பண்ணுவதற்கு முன்பே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தோம். இந்த படத்தின் கதை ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தின் கதை என்று சொன்னார்கள். அதன் பின், பிரேக் டவுன் படத்தை பார்க்குமாறு கூறினார்கள். படத்தை பார்த்த பிறகு, ‘படத்தில் ஹீரோயிசம் இல்லையே’ என்று மகிழ் திருமேனி சாரிடம் சொன்னேன். அதற்கு அவர், இல்ல மாஸ்டர் இந்த படம் சாருக்கும் பிடித்து இருக்கு, எங்களுக்கும் பிடித்து இருக்கிறது. இவ்ளோ மாஸ் பார்த்த சாரை படத்தில் கிளஸ்ஸா காட்டலாம் அதற்கான முயற்சிகளை தான் செய்து வருகிறோம் என்றார்.

சில ஆக்ஷன் காட்சிகள் எடுக்கும் போது என்னை அறியாமல் பீல்டப் காட்சிகள் வைத்துவிடுவேன். அதன் இந்த அளவுக்கு வேண்டாம் கொஞ்சம் குறைங்க என்று சொல்வார்கள். படத்தில் அஜித் சாதாரண மனிதராக நடித்திருப்பார். இந்த படம் மூலமாக அஜித் சார் நல்ல மெசேஜ் கொடுக்க ஆசைப்படுகிறார். படமே இவ்ளோ தான் மீட்டர் இருக்கனும் என்று சொல்லி சொல்லி படத்தை எடுத்தோம். இந்த படத்தை எடுத்து முடிக்க ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது. என்னுடைய நண்பர்கள் எனக்கு போன் பண்ணி, அஜித் சார இப்படி காட்டி இருக்கிற? மாஸ் இல்ல..ஒரு சந்தோஷப்பட்டு கைதட்டாலம் பார்த்தா எதுமே இல்லை என்று சொன்னார்கள். ஆனால் பெண்கள் பாராட்டினார்கள்.

சிலர் ஒண்ணுமே தெரியாமல் கமெண்ட் செய்கிறார்கள். குறிப்பாக மூன்று பேர்கள், நான் சரியாக choreograph பண்ணவில்லை என்று தெரிவித்து இருந்தார்கள். அவர்களுக்கு ஸ்டண்ட் காட்சிகள் எப்படி எடுப்பது குறித்து தெரியுமா? அதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப கோபமாக இருக்கிறது. அந்த வலி யாருக்குமே தெரியவில்லை.

நான் விடாமுயற்சி படத்திற்கும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஒரே நாளில் நடக்கும். இதற்கு ஸ்டண்ட் காட்சிகளை எடுத்து முடித்த பிறகு, அந்த படத்தின் செட்டுக்கு சென்றுவிடுவோம். இதற்கு இடையில் இரண்டு மணி நேரம் தான் தூக்கம். என்னுடைய உதவி கலைஞர்களும் ரொம்ப கஷ்டப்பட்டார்கள். இவ்ளோ கஷ்டப்பட்டு தான் படத்தை எடுத்து முடிக்கிறோம். ஆனால் சிலர் யூடியூப்பில் மோசமாக எங்களை பேசுகிறார்கள. எங்களுக்கு சரியா ஸ்டண்ட் காட்சிகள் எடுக்க தெரியவில்லை என்றால் நீங்கள் வந்து எங்களுக்கு சொல்லி தாங்க என்று சுப்ரீம் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles