Friday, April 17, 2026

தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொண்ட விதம்!! நடிகை அனிகா ஓபன் டாக்..

அனிகா:

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில்
அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்த அனிகா, மீண்டும் அஜித் குமாருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புக்கு கிடைத்தது. அதன் பின் இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த அனிகா, மலையாளத்தில் கடந்த 2023 ம் ஆண்டு வெளியான ஓ மை டார்லிங் படத்தின் மூலமாக ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இந்த படத்திற்கு மோசமான விமர்சனமே வந்தது. தற்போது அனிகா, தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாக இருக்கிறது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்:

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அனிகா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிந்துள்ளார். அதில் அவர், தனுஷ் சாரின் படத்தில் எப்படி இணைந்தேன் என்பதே தெரியவில்லை. ஒரு நாள் தனுஷ் சாரின் மேனேஜர் எனக்கு அழைத்து, தனுஷ் படம் பன்றாங்க அதில் நீங்களும் இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் லீட் ரோலில் நடிக்கிறேன் என்று சொன்னதும் சந்தோஷமாக இருந்தேன். இதுவரை தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கவில்லை. நான் ரொம்ப ஆவலாக இருக்கிறேன்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் ஆரம்பித்து இப்போது படங்களில் நடித்து லீட் ரோலில் நடித்து வருகிறேன். stress -ஆக இருக்கிறது, ஏன்னென்றால் ஒரு படத்தை தாங்கி புடிக்கிறோம். அந்த படங்கள் ஷூட்டிங்கில் ரொம்ப இருந்தேன். பள்ளியில் இருந்து வந்த பிறகு ஷூட்டிங் வருவேன். அப்படியே chill பண்ணிட்டு இருப்பேன். ஆனால் இப்போது கவனத்துடன் நடிக்க வேண்டியா கட்டாயம் உள்ளது.

ஷூட்டிங்கில் தனுஷ் சாருக்கு அமைதியாக இருந்தால் பிடிக்கும். நாங்களும் அப்படி தான் இருப்போம். ஷூட்டிங் முடித்த பிறகு ரொம்ப ஜாலியாக இருந்தோம். நான் இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தில் தான் ரொம்பஹ மகிழ்ச்சியாக இருந்தோம்.மேலும் இப்படத்தில் பலரும் நடித்திருந்தார்கள். எங்களுக்கு வேலை செய்வது போன்ற எண்ணம் வரவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். ஷூட்டிங் போவது போல் நண்பர்களுடன் வெளிய போவது போன்ற எண்ணம் இருந்தது.

எனக்கு ஜோடியாக நடித்த பவிஷ் ரொம்ப நல்ல பையன். பார்க்க பாவமாக இருப்பார், அவருக்கு இது முதல் படம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தார் என்று அனிகா தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles