Friday, April 17, 2026

நடிகர் வடிவேலு செய்த துரோகம், இந்த நிலைமைக்கு இது தான் காரணம்!! பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்கள்..

வடிவேலு:

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகராக இருக்கிறார் வடிவேலு. சினிமாவை தாண்டி வடிவேலு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல சினிமா விமர்சகர் ராஜகம்பீரன், நடிகர் வடிவேலு குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நடிகர் வடிவேலுவின் பூர்விகம் பரமக்குடி சேர்தவர் தான், பிழைப்புக்காக மதுரைக்கு வந்தார் . நடிகர் வடிவேல், அய்யனர் குலசாமி கோவிலுக்கு நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். சினிமாவில் வடிவேலு பெரிய நட்சத்திரமாக இருப்பதால் எல்லாரும் அவரே கேட்டு தான் முடிவு எடுப்பார்கள். இதனை பயன்படுத்தி கொண்டு இவரே பாக்யராஜ் என்பவரை நியமித்து இருக்கிறார்.

கோவில் என்பது பொது விஷயம், எல்லா மக்களும் சேர்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் இவர் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார் என்பதால் மக்கள் அதிர்ப்தி அடைந்துள்ளனர். உண்மையில் வடிவேலு புகழ்மிக்கவர் என்பதால் தான் கிடைத்தது. ஆனால் இப்போது மக்கள் அதிர்ப்தி அடைந்துள்ளதால் இந்த தகவல்கள் மீடியாவில் வர தொடங்கியது. இது பேசி முடிகிற விஷயமாக தான் நான் பார்க்கிறேன்.

தாழ்வு மனப்பான்மை:

சாமானியனாக சினிமாவில் வந்து பெரிய இடத்திற்கு வரும் சிலர் தாழ்வு மனப்பான்மை இருக்கும். ஒரு கட்டத்தில் அது உயர்வு மனப்பான்மை அதிகமாகும்.

திருமண விழாவுக்கு ராஜ்கிரண் செல்கிறார் அப்போது அவரை பார்த்துக்கொள்வதற்காக வடிவேலுவை நியமித்து உள்ளனர். அந்த சமயத்தில், “நான் நல்ல நடிப்பேன், நல்ல பாடுவேன்” என்று வடிவேலு சொல்லியிருக்கிறார். அவருடைய நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு ராஜ்கிரண் சென்றுள்ளார்.

அப்போது ராஜ்கிரனுக்கும் கவுண்டமணிக்கு சண்டை ஏற்படுகிறது. இதனால் வடிவேலு படத்தில் வாய்ப்பு கொடுக்கிறார் ராஜ்கிரண். கொஞ்சம் நாள் உதவியாளராக தனது வீட்டில் தங்க வைத்தார். இப்படி தான் அவர் சினிமாவில் அறிமுகமானார்.

ஷங்கர் கம்பெனியில் படம் பண்ண வடிவேலு, ஒரு கட்டத்தில் அவர்களுடன் சண்டை போட்டுவிட்டார். மேலும் சிம்புதேவனிடமும் சண்டை. இப்படி எல்லாரிடமும் சண்டை. பிரபலமான பிறகு பல இடங்களில் விமர்சனங்கள் செய்து நிறைய மாட்டிக்கொண்டார். அதனால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எல்லாரும் ADMK எதிராக பிரச்சாரம் செய்தார். அதனால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். இது உண்மை இல்லை, வெறும் வந்தந்தி. உண்மையான காரணம் வடிவேலு பல இயக்குனர்களிடம் ஷூட்டிங்கில் சண்டை போட்டு இருக்கிறார். இதன் காரணமாக தான் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வடிவேலு லட்ச கணக்கில் சம்பளம் வாங்கினாலும் அவரிடம் பணியாற்றிய நடிகர்களுக்கு 10,000 தான் சம்பளமாக கொடுத்தார். இதனால் அந்த டீம் 23 -ம் புலிகேசி படத்திற்கு பின் வெளியேறி விட்டாங்க.

இந்த படத்திற்கு பின் வடிவேலு ஹீரோவாக நடித்த எல்லா படங்களும் தோல்வியை தான் கொடுத்தது. அவருடைய நண்பர்கள் மத்தியில் சக நடிகர்கள் மத்தியில் வடிவேலுக்கு நற்பெயர் இல்லை என்பது தான் உண்மை. வடிவேலுவின் அந்த இடத்தை யாராலையும் நிரப்ப முடியாது. அவரும் சிறந்த நடிகர் என்று ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles