Friday, April 17, 2026

பிரமாண்டமாக நடந்து முடிந்த ரம்யா பாண்டியனின் திருமணம்!! வைரலாகும் புகைப்படங்கள்..

ரம்யா பாண்டியன்:

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான ஜோக்கர் படத்தின் மமூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இந்த படத்திற்கு பின்னர் ரம்யா பாண்டியனுக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை. ஆண்தேவதை, மம்மூட்டியுடன் மாலைநேரத்து மயக்கம் போன்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால், இந்த படங்களும் இவருக்கு எதிர்பார்த்த பெயரை வாங்கி கொடுக்கவில்லை.

From Tamil Review – மயக்கும் மிஸ்டரி & ஹாரர் கலந்த தொடர்!

பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் ஒரே ஒரு மொட்டைமாடி போட்டோஷூட் இளசுகள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார். அதன் பின்னர் தொடர்ந்து சோசியல் மீடியா பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியல் நடுவராக இருந்தார். அதை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார். இதன் மூலம் இவருக்கு உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்து. வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இறுதி சுற்று வரை முன்னேறினர். தற்போது ரம்யா பாண்டியன் இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

திருமணம்:

நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக இணையத்தில் சில மாதங்களாக தகவல் வெளிவந்து கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தீபாவளி அன்று ரம்யா தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

ரம்யா பாண்டியன் யோகா பயிற்சிக்கு சென்ற இடத்தில், அங்கு யோகா மாஸ்டராக உள்ள லோவல் தவானுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று காலை ரிஷிகேஷ், கங்கை நதிக்கரையோரத்தில் உள்ள கோயிலில் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் திருமண வரவேற்பு நவம்பர் 15 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles