விடாமுயற்சி:
தடையறத் தாக்க மற்றும் தடம் போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் மகிழ் திருமேனி. இவரும் அஜித்தும் முதல் முறையாக கூட்டணி வைத்து இருந்தனர். ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக்டவுன் படத்தின் தழுவுதல் தான் விடாமுயற்சி திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்ச்னம் கொடுத்து வருகின்றனர்.

வசூல்:
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் விடாமுயற்சி படம் பற்றி பேசியிருக்கிறார்.
அதில் அவர், படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தால் எந்த இயக்குனரும் பேட்டி கொடுக்கமாட்டார் ஆனால் மகிழ்திருமேனி எல்லா சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். இது சந்தோஷமான விஷயம். இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு தயாரிப்பாளருக்கு ஹாப்பி, அஜித் சாருக்கு ஹாப்பி, படத்தின் இயக்குனரான எனக்கும் ஹாப்பி என்று மகிழ் கூறியுள்ளார். இப்படத்தின் வசூல் ரூபாய் 120 கோடிக்கு மேல் தாண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ் நாட்டில் மட்டும் ரூ 70 கோடியை தாண்டி விட்டதாக சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் மட்டும் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.

விடாமுயற்சி வெற்றி படமாக இருந்தாலும் சிலர் இப்படத்தை தோல்வி படமாக மாற்ற வேண்டும் என்று நினைகிறார்கள். முதலில் அந்த நிலைமை மாற வேண்டும். சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் அப்படி சொன்னால் கூட பரவலா.
இதற்கு மேல எந்த இயக்குனர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகமாக்குவர் என்பது எனக்கு தெரியவில்லை. படத்தின் எதிர்பார்ப்பை மகிழ் திருமேனி குறைக்கிறார் என்று சிலர் கமெண்ட் வந்தது. ஆனால் அவர் எல்லா அஜித் படம் போன்று இருக்காது, ஓப்பனிங் பாடல், மாஸ் சாங், சண்டை காட்சிகள் இருக்காது என்று கூறிவிட்டார். மசாலா படமாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் அஜித் குமார் படம் பண்ணி இருக்கிறார். இருப்பினும் படம் எதிர்பார்த்தது போல இல்லை என்று விமர்சனம் செய்கிறார்கள். கடவுள் தான் சினிமாவை காப்பற்ற வேண்டும்.
வீரம் படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் அதே மாதிரி விடாமுயற்சி படத்திற்கும் பண்ணி இருக்கலாம். இருப்பினும் படக்குழு அந்த மாதிரி வேண்டாம் முடிவு எடுத்துள்ளனர். மேலும் படத்தில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தை காட்டவில்லை. அது கற்பனை கதாபாத்திரமாக கூட இருக்கலாம். பிரகாஷ் என்ற கதாபாத்திரம் உண்மையில் இருக்கிறதா? இல்லையா? என்பதை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும் என்று மகிழ் திருமேனி அப்படியே விட்டுவிடுகிறார். ஆனால் அதை பற்றி விரிவாக எடுத்து இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து என்று தனஞ்சயன் கூறியுள்ளார்.



