நயன்தாரா
கேரளாவை பூர்விகமா கொண்ட நயன்தாரா, சரத்குமார் நடிப்பில் உருவான ஐயா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஹரி இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. நயன்தாராவின் சிறப்பான நடிப்பும், அழகும் கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பின்னர் பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதனால் இவர் குறுகிய காலத்திலேயே கோலிவுட் ஒரு இடத்தை பிடிக்க ஆரம்பித்தார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை அடுத்து தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற ரேஞ்சுக்கு உயர்ந்தார்.
அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் படத்தில் படு கிளாமரான ரோலில் எந்தவித தயக்கமுமின்றி நடித்ததன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சினிமாவில் பீக்கில் இருந்த நயன்தாரா, சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார்.அதனால் சினிமாவில் இருந்து கொஞ்சம் நாள் விலகி நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இதையடுத்து, பிறகு ராஜா ராணி, அறம், நானும் ரௌடிதான் என தனது செகண்ட் இன்னிங்ஸில் மாஸ் காட்ட தொடங்கினார்
திருமணம்..
நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நடிக்கும் போது, அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
பொதுவாக திருமணத்திற்கு பின் நடிகைகள் சினிமாவில் இருந்து விலகிவிடுவார்கள்,அல்லது அக்கா தங்கை ரோல்கள் போன்றவற்றில் நடிப்பார்கள். ஆனால் நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் முன்னணி இடத்தில் இருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலமாக நயன்தாரா ஹிந்தி சினிமாவிலுக்கும் அறிமுகமானார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம், ஹிந்தி எனப் பல மொழி படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு:
இந்நிலையில் இன்று நயன்தாரா தனது 40வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, நயன்தாரா ஒரு படத்திற்க்கு ரூ 10 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். சினிமா மட்டுமின்றி அழகு சாதன தொழில், லிப் பாம் கம்பெனி, நாப்கின் கம்பெனி உள்ளிட்டவைகளை செய்து வருகிறார். இவருக்கு கிட்டத்தட்ட ரூ 200 கோடிக்கு மேல் சொத்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது.