மெய்யழகன்
96 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக மாறியிருப்பவர் பிரேம் குமார். தற்போது இவர் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ஸ்ரீ திவ்யா, திவ்யதரிஷினி,ராஜ் கிரண் எனப் பல பிரபலங்களின் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இப்படம் நிச்சயம் வெற்றி பெரும், ரசிகர்களின் மனதை கவரும் வகையில் இருக்கும் என்று படக்குழு தெரிவித்து இருந்தனர். அவர்கள் சொன்னது போல படம் அமைந்து இருக்கிறதா? இல்லையா என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க..
From Tamil Review – மயக்கும் மிஸ்டரி & ஹாரர் கலந்த தொடர்!

திரைக்கதை
சிறுவயதிலிருந்து வளர்ந்து வந்த பூர்விக வீட்டினைச் சொத்து பிரச்னையால் இழக்கிறது அருள்மொழியின் (அரவிந்த் சாமி) குடும்பம். சொந்த மண்ணை மற்றும் வீட்டை விட்டு செல்ல மனம் இல்லாமல் தயங்குகிறார் அருள்மொழி. கடைசியில் தனது தந்தையின் முடிவுக்கு ஏற்ப தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்கிறார்கள். பின்னர் 22 ஆண்டுகளுக்கு பின்புசித்தப்பா மகளின் திருமணத்துக்காக மீண்டும் ஊருக்குச் செல்கிறார் அருள்மொழி. சொந்ததால் தனக்கு செய்த தோரகத்தை நினைத்து, திருமணம் முடிந்த உடன் கடைசிப் பேருந்து ஏறி சென்னைக்கு வந்துவிடவேண்டும் என்று முடிவு எடுக்கிறார். ஆனால் சென்ற இடத்தில் அருள்மொழியின் உறவினர் ஒருவர், அத்தான் அத்தான் என்று அவரை அழைத்த பாசத்தை பொழிகிறார். யார் அந்த நபர் என்று தெரியாமல்? அவரிடம் கேட்ட சங்கடப்படுகிறார் அருள். கடைசி பேருந்து மிஸ் ஆக, அந்த உறவினர் வீட்டிலேயே தங்கி விடுகிறார். அந்த இரவில் இருவரும் அவர்கள் இருவருக்கும் நடக்கிற உரையாடல்கள், உணர்வுப் பகிர்வுகள், நினைவலைகள் பகிர்ந்துகொள்வது தான் படத்தின் கதை..
படம் பற்றிய அலசல்
பெரிதாகத் திரை நேரமில்லாவிட்டாலும் தேவதர்ஷினியும், ஸ்ரீ திவ்யாவும் தங்களின் பெஸ்ட்டை கொடுத்து இருக்கின்றனர். மேலும் ஜெயப்பிரகாஷ், ராஜ் கிரண் எமோஷனல் காட்சிகளில் நம்மை கலங்க அடித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். கார்த்தி மெய்யழகன் கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கார்த்தி -அரவிந்த் சாமி கம்போ நிறைய இடத்தில் சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் கண்கலங்கவும் வைத்துள்ளனர். குறிப்பாக ஃப்ளாஷ்பேக்கில் ஜூனியர் அரவிந்த்சாமியாக வரும் சரண் சக்தியின் நடிப்பும் வேற லெவல்.
பாசிட்டிவ்
1. நடிகர்கள் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்..
2. ஹீரோ ஓப்பனிங் சாங் வைத்து படத்தை போர் அடிக்க வைக்காமல்.. தொடக்கத்தில் இருந்து கதையில் பயணம் செல்கிறது.
நெகடிவ்
1. செகண்ட் ஆப் கொஞ்சம் போர்
2. இன்னும் திரைக்கதையில் வர்க் செய்து இருக்கலாம்..
மொத்தத்தில் மெய்யழகன் பீல் குட் திரைப்படம்..