தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜித் குமார். தற்போது இவரது நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி இருக்கிறார். தற்போது விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், அஜித் சார் பற்றி பேசவேண்டும் என்றால் மணி கணக்கில் பேசலாம். நான் அவருடைய மிக பெரிய ரசிகர். அவருடன் இணைத்து பணியாற்ற மிகவும் விரும்பினேன். அஜித் சார் மற்றவர்களை போல் இல்லாமல் எவ்ளோ நெருக்கமாக பழகினாலும் நம்முடன் எப்போதும் ஒரே மாதிரி தான் நடந்துகொள்ளவார். அஜித் சார் ரேஸ்-க்கு போக இருக்கிறார் என்பதை எங்களுக்கு முன்பே தெரிவித்துவிட்டார். அப்போது எங்களிடம் ரேஸ்க்கு பயற்சி எடுக்கும் வீடியோவை போட்டு காண்பித்தார்.அதில் இரண்டு முறை அஜித் விபத்துக்கு உள்ளானார். அந்த விபத்து வீடியோவை பார்த்த உடன் நாங்கள் பயந்துவிட்டோம். அப்போது அஜித் சார், “நான் ரேஸ்க்கு போறேன். என்னவேனாலும் நடக்கலாம். அதனால் என்னுடைய ஷூட்டிங் கமிட்மென்ட்களை முடிக்க விரும்புகிறேன். நான் ரேஸ் செல்லும் போது என்னுடைய முழு கவனம் ரேஸில் தான் இருக்க வேண்டும்” என்று சொன்னார். அந்த விஷயம் என்னும் ஞாபகத்தில் இருக்கிறது. படத்தை முடித்துவிட்டோம், எடிட்டிங் ஒர்க் சென்றுகொண்டு இருந்தது.அந்த சமயத்தில் எனக்கு மெசேஜ் மற்றும் அழைப்புகள் வந்தது. ஆனால் அதை கவனிக்கவில்லை. அப்போது அஜித் சாரின் உதவியாளர் அஜித் சாரின் கார் விபத்து வீடியோ காண்பித்தார். அவருக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்தோம். அவர் எந்த விஷயத்தில் இறங்கினாலும் 100 சதவீதம் உழைப்பை போடுவார். நடிப்பையும் ரேசிங் தாண்டி அவர் சிறந்த போடோகிராபர்.
மேலும் அவர் ஷூட்டர் , இந்தியாவுக்காக தங்க மெடலும் வாங்கி கொடுத்தார். இதை எல்லாம் தாண்டி அவர் சிறந்த மனிதர். என்னை எப்போது மகிழ் சார் என்று தான் அழைப்பார். என்னுடைய உதவியாளரை கூட சார் என்றே அழைப்பர். விடாமுயற்சி படம் தொடங்கும் முன்பே, நெகடிவ் கருத்துக்களை கேட்க தயாராக இருங்கள் என்று கூறினார். அவர் சொன்ன அப்படியே நடந்தது. நிறைய பேர் நெகடிவ் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.ஆனால் இவ்ளோ வன்மம் இருக்கும் என்று எனக்கு தெரியாது. மகிழ்க்கும் அஜித்துக்கும் செட் ஆகல என்றார்கள்.அதன் பின் மகிழ்க்கும் அஜித்துக்கும் இடையே சண்டை என்று சொன்னார்கள். அதன் பின் பிரச்சனை ஏற்பட்டது என்றனர். டீசர் வந்த பிறகு பலரும் பாராட்டினாலும் டீசர் குறைகள் கூறுகிறார்கள் ட்ரைலர் வந்த பிறகு, படம் வெளியாகுமா? என்று சமூக வலைத்தளங்களில் சிலர் பேசினார்கள். ஏன் கட்டுக்கதைகள் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என மகிழ்திருமேனி தெரிவித்துள்ளார்.



