Sunday, April 19, 2026

பிரபல காமெடி நடிகர் காலமானார்!! மரணத்திற்கு இதுதான் காரணமா?

லொள்ளு சபா:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது லொள்ளு சபா. பல படங்களை ட்ரோல் செய்த இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் சந்தானம், ஜீவா, லொள்ளு சபா மனோகர், பாலாஜி, சுவாமிநாதன், ஜாங்கிரி மதுமிதா, மனோகர், பழனியப்பன், சேசு எனப் பலரும் தற்போது சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்துவிட்டனன்.

இரங்கல்:

இந்நிலையில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிகர் சந்தானத்துடன் பல எசோடில் கலந்து கொண்ட நடிகர் ஆண்டனி சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலை காலமானார். தற்போது இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ஆண்டனி கடந்த சில மாதங்களாக கடுமையான உடல்நல பிரச்சனைகளால் சிக்கியிருந்தார். முதலில் நெஞ்சு சளி ஏற்பட்டு , பின்னர் ஆஸ்துமாவாக மாறியது. அதன் பின்னர் இடுப்புக்கு கீழ் பகுதிகளில் நீர் retention ஏற்பட்டு, நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். தற்போது, சாதாரணமாக படுத்து தூங்க முடியாமல், உட்கார்ந்தவாறும், நிற்கும் நிலையில் சிறிது நேரம் தூங்கும் துன்பமான சூழ்நிலையில் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வந்தார்.

இந்த உடல்நிலை பிரச்சனைக்கு முன்பே அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டு பிரிந்துவிட்டனர். இதனால், அவரை கவனிக்க யாரும் அருகில் இல்லை என ஒரு நேர்காணலில் ஆண்டனி வெளிப்படையாக கூறியிருந்தது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது.

அந்தநிலையில், நடிகர் பழனியப்பன் தொடர்ந்து ஆண்டனிக்கு தேவையான உதவிகளை செய்ததோடு, சொந்த பணத்திலும் உதவி செய்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles