Wednesday, March 4, 2026

தமிழ் நாட்டில் மட்டும் அஜித்தின் குட் பேட் அக்லி இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!!

குட் பேட் அக்லி

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், குட் பேட் அக்லி படம் அஜித்தின் உறுதியான ரசிகர் கூட்டத்திற்காகவே உருவாக்கப்பட்டது ஒரு மூன்றாம் நபராக நான் இப்படத்தை ரசித்தேன். அஜித் ரசிகர்கள் இதை எவ்வளவு அதிகமாக ரசித்திருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். இப்படத்தில் அஜித்தின் முந்தைய படங்களை நினைவூட்டும் பல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ரசிகர்களுக்கு நாஸ்டால்ஜியாவையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் வகையில் இவற்றை வேண்டுமென்றே சேர்த்துள்ளார்.

வசூல்?

குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 35 கோடி ரூபாயைத் தாண்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அஜித்தின் முந்தைய படங்களான வலிமை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை விட பெரிய தொடக்கத்தைக் குறிக்கிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் எல்லாமே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ரசிகர்கள் ‘எப்போது படம் வரும்’ என்று ஆவலுடன் காத்திருந்தனர். இதன் விளைவாக, இப்படம் மிகப்பெரிய தொடக்க வசூலைப் பெற்றது.

பிரபல காமெடி நடிகர் காலமானார்!! மரணத்திற்கு இதுதான் காரணமா?

இப்படம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுவான பார்வையாளர்களையும் ஓரளவு கவர்ந்துள்ளது. இது ஒரு பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. சினிமா என்பது மக்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும், எப்போதாவது ஒரு கருத்தைச் சொல்லலாம், ஆனால் முழுக்க முழுக்க கருத்து சொல்வதாக இருக்கக் கூடாது.

அஜித்தின் முந்தைய படங்களான விவேகம் போலல்லாமல், இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய முயற்சி என்பதாகும். விவேகம் படத்தில் அஜித்தைப் புகழ்ந்து தள்ளினார்கள், ஆனால் இப்படம் அதை விட பல மடங்கு உயர்ந்து நிற்கிறது. இதற்கு முன் இப்படி ஒரு படம் அஜித்துக்கு வந்ததில்லை. இது ரசிகர்களுக்கு ஒரு பரிசு.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம், அஜித்தின் பழைய காட்சிகளையும், அவரது ரசிகர்களின் உற்சாகமான தருணங்களையும் மீட்டெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிக், அஜித்தை தனது இளமைக் காலத்தில் எப்படி பார்த்தாரோ, அந்த உணர்வை இப்படத்தில் கொண்டு வந்துள்ளார்.

ரசிகர்கள் இப்படத்தை முழுமையாகக் கொண்டாடினாலும், குடும்பப் பார்வையாளர்களை இது கவருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. “அஜித் எப்போதும் குடும்பங்களால் விரும்பப்படும் ஒரு நடிகர். குழந்தைகளுக்கு அவரைப் பிடிக்கும், குழந்தைகளை அவருக்கு பிடிக்கும். இப்படம் குடும்பங்களுக்கு ஒரு அழுத்தமான படமாக இருக்காது. இது ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் அஜித்தை கொண்டாடுவது போல் வெளி மாநிலங்களில் கொண்டாடுவது குறைவு. உதாரணமாக, தெலுங்கு படம் ஒன்று இங்கு வந்தால், நாம் அதை முழுமையாக ரசிக்க மாட்டோம். அதேபோல், இப்படமும் வெளி மாநிலங்களில் அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம். இருப்பினும், வெளிநாடுகளில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அந்தணன் கூறியுள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles