டிராகன்
கடந்த 2019ம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தை தொடர்ந்து லவ் டுடே படத்தில் அவரே இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை ags நிறுவனம் தயாரித்து இருந்தது. சின்ன பட்ஜெட் படமான இப்படம் ரூ கோடிக்கு மேல் வசூல் செய்து மிக பெரிய சாதனை படைத்தது.
தொடர்ந்து இரண்டு படங்கள் மிக பெரிய வெற்றி பெற்ற நிலையில், ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உடன் கூட்டணி வைத்து இருந்தார். இந்த படத்தையும் ags நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் மிஸ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், கையேடு, அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ் ரவிக்குமார், விஜே சித்து, ஹர்ஷத் கான் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் சிறப்பு கதாபாத்திரத்தில் சினேகா, இவானா உள்ளிட்ட நடிகைகளில் நடித்திருந்துள்ளனர்.
டிராகன் படம் ட்ரைலர் வெளியான பிறகு பலரும் இப்படம் சிவகார்த்திகேயனின் டான் படம் போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கலாய்த்து வந்தனர். குறிப்பாக ட்ராகன் படம் டான் இரண்டாம் பாகம் என்று மீம் பதிவிட்டு வந்தனர். சில பேட்டிகளில் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இப்படம் நிச்சயம் மிக பெரிய வெற்றி பெரும் என்று படம் வெளியாகுவதற்கு முன்பே பேசியிருந்தார். படம் வெளியாகுவதற்கு முன்பே over confidence -ல் பேசுகிறார் என்று ஒரு பக்கம் அவரை பலரும் விமர்சனம் செய்து வந்தனர். ஒரு படம் வெளியாகுவதற்கு முன்பே படம் இப்படி விமர்சனங்களில் சிக்கி வந்த நிலையில், டிராகன் படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

கோமாளி, லவ் டுடே படத்தில் எப்படி இளைஞர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைத்ததோ அதே போல டிராகன் படத்திற்கு பயங்கரமான வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை பிரதீப் ரங்கநாதன் பிடித்துவிட்டார் என்று சொல்லலாம். சமூக வலைத்தளங்களில் முழுவம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். மேலும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து திரைக்கதையை அருமையாக வடிவமைத்துள்ளார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
டிராகன் படத்தின் பட்ஜெட் ரூபாய் 37 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பேட்டியில் கூறியிருந்தார். மேலும் இந்த படத்தின் ரயிட்ஸ் பல கோடி மேல் வியாபாரம் ஆகி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டது.
வசூல்?
இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த படம் வெளியாகி மூன்று நாட்களில் ரூபாய் 50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.



