அஜத் குமார்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜத் குமார். இவர், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வர உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தின் காப்பி என்றும், மேலும் உரிய அனுமதியை பணம் கொடுத்து படக்குழு பெறவில்லை என்றும் இதனால் லைக்கா மிக பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. இப்படி படத்திற்கு சிக்கல் ஒரு பக்கம் எழுந்து இருக்கும் நிலையில் அனிருத் இசையில் உருவாகியுள்ள விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த வாரம் வெளியாகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த வாரம் வெளியாகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் நடிகர் அஜித் அதிகம் பிரைவசியை விரும்பக்கூடிய நபராக இருக்கிறார்.. எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளமாட்டார். அதுமட்டுமின்றி, ‘தல’ என அழைக்க வேண்டாம் என்றும் தனக்கு எந்தவொரு அடைமொழியும் வேண்டாம். AK அல்லது அஜித் குமார் என்று அழைத்தாள் போதும் என்று தெரிவித்து இருக்கிறார்.
சமீப காலமாக “கடவுளே அஜித்தே”ன்னு ரசிகர்கள் கோஷம் போட்டு வருவது குறித்து அஜித் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில்,அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க….. . அஜித்தே “என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்! வாழு & வாழ விடு! என்று தெரிவித்துள்ளார்.