Saturday, April 18, 2026

அப்பா மறைவால் ஏற்பட்ட வலி., போலீஸ் உடன் நடந்த சண்டை!! லாஸ்லியா கண்ணீர் பேட்டி..

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை லாஸ்லியா. இதனை அடுத்து பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய லாஸ்லியா தன்னுடைய அப்பா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், என்னுடைய அப்பா குறித்து வந்த செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு மூன்று நாட்கள் தேவைப்பட்டது என்னுடைய அப்பா இதை ஏற்றுக்கொள்வதற்கு. இனி அந்த நபரை பார்க்க மாட்டோம்.. நான் பத்தியம் போல விஷயம் பண்ணிக்கொண்டு தான் இருப்பேன். எனக்கு நல்ல விஷயம் நடந்தாலும் சரி கெட்ட விஷயம் நடந்தாலும், அந்த நபருக்கு அனுப்பிக்கொண்டு இருப்பேன். அந்த வலி, அந்த வேதனை பற்றி நான் எந்தொரு பேட்டிகளிலும் பேசியதில்லை.

நான் நடித்த பிரிண்ட்ஷிப் படம் வெளியான சமயத்தில் ஒரு பேட்டியில் என்னுடைய அப்பா குறித்து கேள்வி கேட்பார்கள். ஆனால் அதற்கு, அந்த விஷயத்தை அப்படியே ஸ்கிப் பண்ணிருங்க என்று சொல்லி இருப்பேன். அப்போ எனக்கு கொஞ்சம் சின்ன வயது என்பதால், எப்படி கையாளுவோம் என்று தெரியாமல் அப்படி சொன்னேன். அது தொடர்பான கேள்விகள் வரும் போது நான் நொறுங்கிவிடுவேன்.

அப்போதிலிருந்து இப்போது வரை என்னுடைய வாழ்க்கையை லீட் பண்ணி கொண்டு செல்கிறேன் என்றால் அது ரொம்ப பெரிய விஷயமாக நான் கருதுகிறேன். ஓவர் நைட்டில் அப்படி ஆச்சி. என்னுடைய சகோதிரிகளுக்கு என்னால் முடிந்த உதவி செய்யணும். நம்ப ஊருளில் இருந்து வந்த பொண்ணு அங்க போய்ட்டு நல்ல செய்றங்க என்று என்னுடைய நாட்டு மக்கள் பேச வேண்டும். நான் எப்போதும் தோல்வி அடைந்து போக கூட என்று நினைப்பேன்.

கோவிட் நேரத்தில் அப்பா மறைந்தார். சென்னையில் இலங்கை போனதும் 15 நாட்கள் கோரன்டைன் வைத்து இருந்தார்கள். தனிமையில் இருந்தேன், ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்த நேரத்தில் கொரோன பீக்கில் இருந்தது. அப்பா எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தார். நான் இறந்தால் இலங்கையில் தான் இறுதி சடங்கு செய்யணும் நிறைய தடவ சொல்லி இருக்கிறார். அவர் நினைத்து போல இலங்கையில் இறுதி சடங்கு செய்து முடித்தோம் . ஏர்போர்ட் போகும் போது, அப்பாவின் உடலை பார்க்கும் போது ரொம்ப வலியா இருந்தது. இப்போது வரை யோசித்தால் எப்படி அதை செய்து முடித்தோம் என்று எண்ணம் வருகிறது. அந்த நேரத்தில் போலீஸ் கூட சண்டை போட்டு, ஏர்போர்ட்ல இருந்து கொடுக்க மாட்டேன் என்று சொன்னார்கள், எனக்கு இணைக்கு கொண்டு போகணும் என்று சண்டை போட்டு, மருத்துவமனைக்கு சென்று இதை எல்லாம் தனி ஆளாக செய்தேன் என்று லாஸ்லியா எமோஷனலாக பேசியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles