நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்:
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி சினிமாவில் நடக்கும் பல சுவாரசியமான தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் கலந்துகொள்ளவில்லை. அதற்கு காரணம், அங்க வந்தால் ஊடகத்தின் கவனம் நம் மீது திரும்பிடும், எல்லாரும் நம்ம கிட்ட கேள்வி கேட்பார்கள். இந்த படத்தை விட்டுவிட்டு தனிப்பட்ட கேள்விகளை கேட்பார்கள். எதாவது பேசி அது வைரலாகி எங்கயோ போய்விடும். அந்த படத்தில் நடித்த நடிகர்கள் மீது கவனம் வராது. இப்படியெல்லாம் நடக்க கூடாது என்பதே முன்பே தனுஷ் கணித்திவிட்டார்.
ப்ரோமோஷன்:
கடந்த சில வாரங்களாக இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். அதற்கு தனுஷ் எடுத்த இந்த முடிவு தான் காரணம். முழுக்க முழுக்க நீங்களே படத்தின் ப்ரோமோஷன் பணிகளை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, இட்லி கடை படத்தின் ஷூட்டிங்க்கு சென்றுவிட்டார். அந்த படத்தின் ராமநாதபுரத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
தனுஷ் வந்திருந்தால், படம் குறித்து கேள்வி கேட்கமால் வேற எதாவது கேள்வி கேட்பார்கள். தொடர்ந்து பல படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை பார்க்கிறோம். படத்தை ப்ரொமோட் செய்யும் செலவு செய்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார்கள். ஆனால் அங்கு வேற மாதிரியான கேள்வி கேட்டு கடைசியில் திசை மாறி போய்விடும். அந்த மாதிரி நடந்து பல தயாரிப்பாளர்கள் புலம்பி இருக்கிறார்கள்.
நடிகர் தனுஷ் இயக்குனராக தன்னை நிரூபித்துவிட்டார். அவருடைய ஒரே நோக்கம் அக்கா பையனை எப்படியாவது சினிமாவில் பெரிய நடிகராக வர வேண்டும் என்பது தான். அதற்கான படமாக இது இருக்கும்.
சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் பத்திரிகையாளர்களை சந்திப்பார், அவர்களுடன் நன்றாக கலந்துரையாடுவார். ஆனால் ஒரு கட்டத்தில் இப்படி பத்திரிகையாளர்களை சந்தித்தால் நம்ப எப்படி விஜய் ஆகுறது, அஜித் ஆகுறது.. என்று அவருக்கு ஞான உதயம் பிறந்து மீடியாவிடம் விலகி சென்றுவிட்டார்.

ஜிவி பிரகாஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு சம்பளம் வாங்காமல் படத்தை இசையமைத்துள்ளார் என பிரஸ் மீட்டில் தெரிவித்து இருந்தார். இது உண்மையா என்பது எனக்கு தெரியவில்லை. இப்போது ஜிவி பிரகாஷ் தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். ஏற்கனவே இவர்களுக்கு நல்ல நட்பு இருந்தது, ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு பேசாமல் இருந்தனர். இப்போ நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். ஒரு வேலை படம் சின்ன பட்ஜெட்டில் இருப்பதால் சம்பளம் வாங்காமல் இருந்திருக்கலாம். படம் மிக பெரிய வெற்றி கொடுத்தால் பணம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.




