Friday, April 17, 2026

திரிஷாவை தவறாக பேசுபவர்கள் கீழ்த்தனமான ஆட்கள்!! கடுப்பான இயக்குனர் மகிழ் திருமேனி..

விடாமுயற்சி:

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் இப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இருப்பினும் சிலர் படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மகிழ் திருமேனி,  விடாமுயற்சி படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், விடாமுயற்சி படம் டப்பிங் சமயத்தில் அஜித் சார் முழு படத்தை பார்த்தார். அவர் பார்த்துவிட்டு சொன்ன முதல் விஷயம், ‘நான் நினைத்ததை விட படம் நன்றாக வந்து இருக்கிறது’ என்று சொன்னார் . மேலும் அவர் ஆரவ் இடம், ‘மகிழ் திருமேனி படத்தை அருமையாக எடுத்துள்ளார்’ என்று சொல்லி இருக்கிறார். அஜித் சார் வைத்து படம் பண்ண வேண்டும்  என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. சுரேஷ் சந்திரா என்னுடைய நண்பர், சகோதரர் மாதிரி. ஆனால் வாய்ப்பு கேட்க விரும்பவில்லை. வாய்ப்பு இருந்தால் அவர்களே நம்மை அழைப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக என்னை தயார் படுத்திக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தது.

ஏற்கனவே ப்ராஜெக்ட் ஆரம்பித்து அதற்கான வேலைகள் நடந்து வந்தது. ஒரு வருடம் கழித்து தான் நான் உள்ள வந்தேன். அந்த நேரத்தில், ஒரு கதை இருந்தது அதை தான் நம்ப பண்ண போகிறோம் என்று கூறினார்கள். எனக்கு அஜித் சார் வைத்து மாஸ் ஆக்ஷன் படம் பண்ண வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இந்த படம் அஜித் சாருக்கு சரியாக இருக்கும். அவருடைய இமேஜ்-க்கு இந்த கதை நன்றாக இருக்குமா? என்று சந்தேகம் எனக்குள் இருந்தது.

comfort zone:

அஜித் சார் மெசேஜ் உள்ள படங்களை அதிகம் பண்ண விரும்புகிறார். அதில் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். விடாமுயற்சி படம் குறித்து பேசும் போது, நான் என்னுடைய comfort zone-ல் இருந்து வந்துவிட்டேன். நீங்களும் அதில் இருந்து வாங்க மகிழ் என்று அஜித் சார் சொன்னார்.

பிரேக் டவுன் படம் போல விடாமுயற்சி படம் இருக்காது. அந்த படத்தில் என்ன காட்டவில்லையோ அதை இந்த படத்தில் காண்பித்து இருக்கிறோம். திருமண பந்தத்தில் விருப்பம் இல்லையெனில் அதில் இருந்து விலகி போக பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. இந்த கருத்தை தான் விடாமுயற்சி படத்தில் பேசியிருக்கிறோம். படத்தில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தை பற்றி காட்டவில்லை. இந்த படத்தில் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. திரிஷாவை தவறாக பேசுபவர்கள் , எல்லாரும் கீழ்த்தனமான ஆட்கள் என மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles