Friday, April 17, 2026

சதி வலையில் நடிகர் கவின்? பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்கள்..

கவின்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கவின். இதனை அடுத்து இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு இறுதி சுற்று வரை முன்னேறினார்.

பிக் பாஸ் பிறகு அவர் நடித்த டாடா திரைப்படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஸ்டார் என்ற படத்தில் நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் வெளிவந்த ப்ளடி பக்கர் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்கும் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படம் தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் கவின் பல படங்கள் லைன் அப் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சுபைர், கவின் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், நடிகர் கவின் குறித்து தொடர்ந்து நெகடிவ் கருத்துக்கள் வந்துகொண்டு இருக்கிறது. பாஸிட்டிவ் கருத்துக்கள் எதுவும் வரவில்லை. வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி நெகட்டிவ் கருத்துக்கள் வருவது ஆரோக்கியமாக இருக்காது. கவின் பெரிய வெற்றி படமும் கொடுக்கவில்லை. அவருடைய முதல் படம் தோல்வியை சந்தித்தது.

அதனை அடுத்து டாடா படம் வெற்றியை கொடுத்தது. இதை தவிர்த்து வெற்றி படம் கொடுக்கவில்லை. ஸ்டார் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக தோல்வியை தான் சந்தித்தது. ப்ளடி பெக்கர் திரைப்படம் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. இப்படி இருக்கும் சூழலில் கவின் குறித்து தொடர்ந்து நெகடிவ் கமெண்ட் அதிக வந்துகொண்டு இருக்கிறது இந்த விஷயம் ஆச்சிரியமாக இருக்கிறது. சிலர், விஜய்யை நோக்கி கவின் செல்கிறார் என்றும் தன்னை சின்ன தளபதியாக காட்டிக்கொள்ள நினைக்கிறார் என்று கூறுகிறார்கள்.

சதி வலை?

வெற்றி தோல்வி நிதானமாக கையாளவில்லை என்றால் அது எங்கயோ கொண்டு சென்றுவிடும். இப்படி சதி வலையில் கவின் பின்பட்டு இருப்பாரு என்ற சந்தேகம் வருகிறது. அடிமட்டத்தில் இருந்து வந்த கவின் இப்படி நடந்துகொள்வாரா என்ற ஆச்சிரியம் வருகிறது. கவின் இதை ரியலைஸ் பண்ணவில்லை என்றால் பல பின்விளைவுகளை சந்திக்க நேரும். சினிமாவில் பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இது சாதாரண விஷயம் கிடையாது. இப்படி வளர்ந்து வரும் நேரத்தில் தெரிந்து செய்கிறாரா இல்லை தெரியாம செய்கிறாரா என்பது தெரியவில்லை. வளர்ந்து வரும் நேரத்தில் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதனால் கவனமாக இருக்க வேண்டும் என்று சுபைர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles