Sunday, April 19, 2026

மலையாளத்தில் வெளியான ஐ அம் காதலன் படத்தின் விமர்சனம் இதோ..

ஐ அம் காதலன்:

சமீபகாலமாக மலையாளத்தில் வெளியாகும் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் நாஸ்லேன் நடிப்பில் வெளிவந்த ஐ அம் காதலன் படத்தை குறித்து பார்க்கலாம் வாங்க..

ஸ்டோரி லைன்:

கல்லூரியில் படிக்கும் விஷ்ணுவும் (நஸ்லென்) ஷில்பாவும் (அனிஷ்மா அனில்குமார்) இருவரும் காதலித்து வருகிறார்கள். கணினி சார்ந்த விஷயங்களில் விஷ்னு வல்லவராக இருக்கிறார். அவருடைய நண்பருக்காக ஒரு பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்கிறார். இப்படி ஹேக்கிங்கில் சிறந்த விளங்கினாலும் அவருக்கு சரியான வேலை அமையவில்லை, மேலும் கல்லுரியில் நிறைய அரியர் வைத்து இருக்கிறார்.

இப்படி விஷ்ணு பொறுப்பற்று இருப்பதால் விஷ்ணு, ஷில்பா இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. ஷில்பா தனது தந்தையின் சாக்கோ பெரியடனின் நிதி நிறுவனத்தில் பணிக்கு சேர்கிறார். தனது காதலியிடம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு, காதலை புதுப்பிக்க நோக்கத்தில் சென்ற விஷ்ணு, காதலியின் தந்தையிடம் சிக்கி கொள்கிறார். அந்த இடத்தில் வைத்து விஷ்ணுவின் கன்னத்தில் அடி விழுகிறது. இந்த சம்பவத்தை நினைத்து கோபம் அடைந்த விஷ்ணு, எப்படியாவது காதலியின் தந்தை பழி வாங்க வேண்டும் என்று எண்ணத்தில் சாக்கோ பெரியடனின் கம்பனியை ஹேக்கிங் செய்கிறார். இதனால் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே ஐ எம் காதலன் படத்தின் கதை..

படம் எப்படி இருக்கு!!

ப்ரேமலு படத்தின் வெற்றியை தொடர்ந்து நஸ்லன் நடிப்பில் வெளிவந்த ஐ அம் காதலன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து இருந்தனர். அண்மையில் இப்படம் OTT – தளத்தில் வெளியாகி இருக்கிறது.
“பெரும்பாலும் மலையாள படங்கள் எதார்த்தமான கதைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஐ அம் காதலன் படமும் எதார்த்த கதையில் உருவாகி இருக்கிறது .

ஐ அம் காதலன் படத்தில் நஸ்லன் பேசும் காமெடி வசனங்கள் ரசிக்கும் வண்ணம் அமைந்து இருக்கிறது. மேலும் தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தவாறு பல காட்சிகள் இருப்பதால் இளைஞர்களால் எளிதா கனெக்ட் செய்ய முடிகிறது. படத்தில் ஷில்பாவாக நடித்திருந்த அனிஷ்மா அனில்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் இடம் பெற்று இருக்கும் ஹேக்கிங் காட்சிகள், விறுவிறுப்பை அதிக படுத்துகிறது. சென்ட் ஆஃப்பில் வரும் நடிகை Lijomol Jose, Simi என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் சில மணி நேரங்களில் மட்டும் வந்து இருந்தாலும் , அவர் வரும் காட்சிகள் சிறப்பாக இருந்தது.

பாஸிட்டிவ்:

படத்தில் இருக்கும் காமெடி காட்சிகள்.

விறுவிறுப்பான கதை அம்சம்.

படத்தின் BGM.

நெகட்டிவ்

படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் சற்று மெதுவாக நகர்கிறது.

மொத்தத்தில் படம் GEN Z கிட்ஸ்களுக் சிறந்த படமாக இருக்கும்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles