விக்ரம்:
எந்த ரோல் கொடுத்தாலும் 100 சதவீதம் உழைப்பை கொடுப்பவர் தான் நடிகர் விக்ரம். சினிமாவில் அறிமுகமான சமயத்தில் பல கஷ்டங்களை சந்தித்த இவர், தனது விடாமுயற்சியால் தற்போதைய சினிமாவில் முன்னணி டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் தங்கலான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் வெளிவந்தம் இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இருப்பினும் இப்படம் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
வீர சூரா தீர:
இப்படத்தை தொடர்ந்து விக்ரம், அடுத்ததாக சித்தா பட இயக்குனர் அருண்குமாருடன் கூட்டணி வைத்து இருக்கிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ் சூர்யா நடித்திருக்கிறார். மேலும் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில், வருகிற ஜனவரி மாதம் வெளியாக இருந்தது. ஆனால் சில காரணத்தால் படக்குழு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து இருக்கிறது. அண்மையில் வீர சூரா தீர டீசரை படக்குழு வெளிட்டு இருந்தனர், அதற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தனர்.
விக்ரம் 63:
தற்போது விக்ரம் 63 படம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி மண்டேலா, மாவீரன் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சம்பளம்:
இந்நிலையில் சீயான் 63 படத்திற்காக ரரூபாய் 50 கோடி சம்பளமாக விக்ரம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தங்கலான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுக்கு விக்ரம் ரூபாய் 30 கோடி வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.



