தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜுன். தெலுங்கில் பல படங்கள் நடித்திருந்தாலும் இவர் நடித்த புஷ்பா படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கு மொழி மற்றுமின்றி இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். முதல் பாகம் ரூபாய் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனையை படைத்தது.

இதனை அடுத்து தற்போது இரண்டாம் பாகம் பெரிய பொருட் செலவில் உருவானது. இப்படம் 12,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தற்போது பிரீ புக்கிங்கில் மட்டுமே புஷ்பா 2 படம் 100 கோடி ரூபாய்களை அள்ளியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டது. நாளை தினம் படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படம் முதல் நாளே ரூபாய் 300 கோடிகளுக்கு மீள் வியாபாரம் செய்யும் என்று பாக்ஸ் ஆபிஸ் தகவல் கூறப்படுகிறது.
புஷ்பா இரண்டாம் பாகம் முடிந்த உடன் மூன்றாம் பாகம் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் குறித்து பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதில் இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜுன் ரூபாய் 287.36 கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.



