கோமாளி மற்றும் லவ் டுடே படத்தின் மூலமாக பாப்புலர் இயக்குனராக மாறிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ட்ராகன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ட்ராகன் படத்தின் ஆடியோ லாஞ்சில் பல சினிமாவில் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்று பேசிய பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி, லவ் டுடே படங்களை பார்த்து இருக்கிறோம். என்னுடைய வாழ்க்கையில் கடினமான கட்டத்தில் தான் பிரதீப் ரங்கநாதனிடம் படம் சார்ந்து பேசினேன். அந்த நேரத்தில் அவருடன் பேசினேன்.எனக்கு உடனே மீட்டிங் ரெடி பண்ணி கதையை கேட்டு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை பண்றேன் என்று சொன்னார். அதற்கு ரொம்ப நன்றி.
சிலர் ஹீரோ நடிப்பதை பார்த்து திரையில் சந்தோஷப்படுவோம். அத,ற்கு பின் அவர்கள் எந்த மாதிரியான கதைகளை எடுக்கிறார்கள் , என்ன பண்ண போறாங்க என்பதை தெரிந்து சந்தோஷப்படுவோம். ஒரு பக்கம் அவங்க என்ன கதாபாத்திரம் பண்ண போறாங்க என்பதை தெரிந்துகொள்ள மாட்டோம் ஆனால் அவர்களே பின் தொடருவோம், அவர்கள் நடிக்கிற விதம், அவர்கள் பேசும் விதம் போன்றவற்றை பார்த்து பின் தொடராமல், அவர்களின் ரசிகராக மாறுவோம். அந்த மாதிரி நிறைய ரசிகர்கள் சேரும் போது பெரிய ஸ்டாராக மாறுவார்கள்.. அப்படி பிரதீப் ரங்கநாதன் பெரிய ஸ்டாராக இருப்பார். அவருடைய நடிப்புக்கும், பேசும் விதத்திற்கும் ரசிகர்கள் வருவார்கள். அதற்கான தனி ரசிகர் கூட்டம் வரும் என்பதே நான் நம்புகிறேன்.
நான் ஸ்கிரிப்ட் பண்ணும் போது அஸ்வத் உடன் நிறைய பேசி இருக்கிறேன். அவர் மீது நிறைய மரியாதை இருக்கிறது. யாரிடமும் ஈகோ பார்க்கமாட்டார். அவர் படத்திற்கு பாட்டு எழுதும் போது கூட எளிதாக முடிந்தது. அவருடன் நட்பாக மாறி இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றி அவர்களுக்கு எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
நான் பாடல் எழுதும் போது மனதில் இருந்து தான் எழுதிருக்கிறேன். போடா போடி படம் பண்ணும் போது அய்யோயோ அய்யயோ மாட்டிகிட்டேன். அந்த படம் ஒரு வருடத்திற்கு முன்பே எடுத்துவிட்டோம். ஆனால் பாடல் காட்சி எடுக்கவில்லை. அப்போது சிம்பு சார் எனக்கு போன் பண்ணி , விக்கி இனி பாட்டு எழுதும் போது வார்த்தைகளை பார்த்து எழுது. இப்போ பாரு பாட்டு எதுக்கு முடியாமல் எவ்ளோ நாள் முழிச்சிட்டு இருக்க என்று சொன்னார். மேலும் நான் பாட்டு எழுதும் போது நீ நல்ல பாட்டு எழுதுற நீயே இனி எழுது என சொன்னதும் சிம்பு சார் தான். அப்போது இருந்து பாடல் எழுதுவதை கவனமாக எழுதுகிறேன் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.