நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த இவர், நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தனர். அதன் பின் வடிவேலு மாமன்னன் படத்தில் முக்கியமான ரோலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல தாயரிப்பாளர் வி சேகர் , கேப்டன் விஜயகாந்த் விஷயத்தில் அப்படி பேசி இருக்க கூடாது. விஜயகாந்த் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்து இருக்கிறார்.அவர் ரொம்ப கஷ்டப்பட்டு தான் சினிமாவில் வந்து இருக்கிறார். அதுமட்டுமின்றி தனிப்பட்ட முறையில் நிறைய உதவிகள் செய்து இருக்கிறார். நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்துள்ளார். இப்படி இருக்கும் சூழலில் திடீரென அரசியல் போய்ட்டார்.
வடிவேலால் எனக்கு எந்தவொரு பிரச்சனையும் எனக்கு வந்ததில்லை. சரவணன் பொய் என்ற படத்தில் என்னுடைய பையன் நடித்தார். அந்த படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கிறதாக இருந்தது. நீங்க நிறைய படம் கொடுத்து தூக்கிவிட்டீங்க..அதே போல உங்க பையன் படத்தில் அண்ணன், மாமா எதாவது கதாபத்திரத்தில் நடித்து பையன மேல தூக்கலாம் என்றார். வெளிநாடுகளில் படித்துக்கொண்டு இருந்து என் மகனை படத்தில் இறக்கினேன். கதை எல்லாம் கேட்டு படம் தயார் செய்தோம்.
திடீரென நான் அரசியலுக்கு போறேன், திமுக-வுக்கு பிரச்சாரம் செய்ய போகிறேன். படத்தை ஒரு மாசம் தள்ளிப்போடுங்க என்று வடிவேலு சொன்னார். மேலும், திமுக தேர்தலில் வெற்றி பெற்றால் என்னை MP பதிவு தருவதாக அழகிரி அண்ணா சொல்லி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் நான் போற இடம் நல்ல கூட்டம் வருகிறது என்று வடிவேலு சொன்னார்.
அரசியல் மேடைகளில் நடிகர் விஜயகாந்தை மிக மோசமாக வடிவேலு பேசினார். கருத்து ரீதியாக பேசலாம். ஆனால் தவறா தனிப்பட்ட விஷயங்களை பேச கூடாது. விஜயகாந்த் மிக பெரிய நடிகர். சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு தான் வந்தார். கடைசியில் அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றது.
அதன் வடிவேலு சொந்த ஊருக்கே சென்றுவிட்டார். என்னைய குறி வச்சிட்டாங்க. என்ன இனி விட மாட்டாங்க என்று வடிவேல் கூறினார். அதற்கு நான், இரண்டு பேரும் சினிமாவில் தான் இருக்கீர்கள். தெரியாம மேடையில் பேசிட்டேன் என்று சொன்னால் விஜயகாந்த் மணிவிடுவார் என்றேன். இல்லனா நான் வரமாட்டேன் என்று வடிவேலு கூறிவிட்டார்.
அப்போது என்னுடைய படத்தை விவேக், கருணாஸ் வைத்து தான் பண்ணி முடித்தோம். இதனால் என்னுடைய பையன் வாழ்க்கை தள்ளி போச்சி. குறிப்பாக வடிவேலு – என்னுடைய கம்போ பெரிய அளவில் பேசப்பட்டது. ஒரு வெற்றி கம்போவாக இருந்தது என்று வி சேகர் தெரிவித்துள்ளார்.