TTF வாசன்:
யூடியூப் பிரபலமான TTF வாசன் பைக்கில் அடிக்கடி சாகசம் செய்து சிறைக்கு செல்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் வீரன் படத்தின் மூலமாக TTF வாசன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.
நீக்கம்?
இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தில் இருந்து TTF வாசனை நீக்கி இருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய இயக்குனர் செல்அம் TTF வாசன் என்னுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று விரும்பினேன்.ஆனால் சூழ்நிலை ஒத்துவரவில்லை. மஞ்சல் வீரன் படத்தின் புதிய ஹீரோவை வரும் அக்டோபர் 15ம் தேதி அறிவிக்கப்படுவார். படத்தில் இல்லை என்றாலும் தம்பி TTF வாசனுடன் உறவு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.