தண்டர்போல்ட்ஸ்:
சமீபத்தில் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) புதிய படைப்பான தண்டர்போல்ட்ஸ் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தியதால் தண்டர்போல்ட்ஸ் படம் ரிலீஸ் எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து இருந்தார்கள் என்று கூறலாம். தற்போது தண்டர்போல்ட்ஸ் படம் குறித்து பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்:
மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் பல சூப்பர் ஹீரோக்கள் கதாபாத்திரங்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய குழுவை உருவாகியுள்ளது. எலினா (பிளாக் விடோ) தனக்கு கொடுக்கும் டாஸ்க் எல்லாவற்றையும் செய்து முடிக்கிறாள். இருப்பினும் தனிமை, கடந்த காலத்தில் நடந்த மோசமான நிகழ்வுகள் நினைவுக்கு வருகிறது. இந்த நிலையில் valentina கொடுத்த டாஸ்க் முடிக்க சென்ற எலினா, US Agent மற்றும் டாஸ்க் மாஸ்டர் சென்ட்ரி ஆகியோரை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் குழுவாக இணைகிறார்கள். சக்திவாய்ந்தவராக இருக்கும் சென்ட்ரி ஒரு கட்டத்தில் வில்லனாக மாறுகிறார்கள். இதை எலினா, US Agent மற்றும் கோஸ்ட், winter soldier, ரெட் கார்டியன் ஒரே டீம்மாக சேர்ந்து எப்படி மக்களை காப்பாற்றினார்கள் என்பதை படத்தின் கதை..
படத்தை குறித்த அலசல்:
மார்வெலின் சூப்பர்மேன் என்று அழைக்கப்படும் சென்ரி எந்த அளவுக்கு சக்திவாய்ந்தவராக சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பதை பற்றி கதை நகர்கிறது. சென்ட்ரியின் இரட்டை புரிதல்களான அப்பாவித்தனமான தன்மையையும், இருண்ட வாய்டு என்ற பக்கத்தை கொண்டு செல்கிறது.
From Tamil Review – மயக்கும் மிஸ்டரி & ஹாரர் கலந்த தொடர்!
முன்னதாக பிளாக் விடோ உள்ளிட்ட படங்களில் அறிமுகமான ரெட் கார்டியன், டாஸ்க்மாஸ்டர், கோஸ்ட் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இப்படத்தில் ஒரு குழுவாக இணைகின்றனர். ஆனால், பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவை முழுமையாக ஆராயப்படவில்லை என்ற குறை எழுகிறது. குறிப்பாக, டாஸ்க்மாஸ்டர் கதாபாத்திரம் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.
படத்தின் ஆக்ஷன் காட்சிகள், குறிப்பாக சென்ட்ரி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு இடையேயான மோதல் காட்சி, பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. இது, DC-யின் ஜஸ்டிஸ் லீக் படத்தின் சில காட்சிகளை நினைவூட்டும் வண்ணம் இருந்தது. இருப்பினும், ஆக்ஷன் காட்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, படத்தின் பலவீனமாக சுட்டிக்காட்டப்படுகிறது. படத்தின் ஒட்டுமொத்த தாக்கம், முந்தைய மார்வெல் படங்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது.
நெகடிவ் :
கதையில் ஆச்சரியமான திருப்பங்களின் பற்றாக்குறையை இருந்தது. அடுத்த என்பதை எளிதாக நம்மால் கணிக்க முடிவதால் படத்தின் மீதான சுவாரிஸ்யம் குறைகிறது.
பாஸிட்டிவ்
நகைச்சுவை, காட்சி அமைப்புகள் மற்றும் போஸ்ட்-கிரெடிட் காட்சிகள்.
ரெட் கார்டியனின் நகைச்சுவை ரசிக்கும் படியாக இருந்தது.
Ratings : 6.5/10