Thug Life
கமல் ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான திக் லைப் திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்தில் நடிகர் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் ஜோஜு ஜார்ஜ், நாசர், அபிராமி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
கதைக்களம்
தக்லைப் ஒரு கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டது. மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் கமல்ஹாசனின் கதாபாத்திரத்தைச் சுற்றி கதை நகர்கிறது. கமல்ஹாசனின் உயிரைக் காப்பாற்றிய சிலம்பரசனின் கதாபாத்திரம், அவருடன் இணைந்து பயணிக்கிறது. “நீ என்னைக் காப்பாற்றினாய், இனி நீ என்னுடனே இரு” என்று தொடங்கும் இந்தக் கதை, இருவருக்கும் இடையேயான மோதல்களையும், பிரச்சனைகளையும், அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை.
பிரமிக்க வைக்கும் ஆக்ஷன் காட்சி – Karate Kid: Legends படத்தின் திரைவிமர்சனம்!!
படத்தை பற்றிய அலசல்:
மணிரத்னத்தின் பாணியில், இது வழக்கமான கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும், அவரது தனித்துவமான கைவண்ணத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தளபதி, நாயகன், செக்க செவந்த வானம் போன்ற படங்களைப் போலவே, தக்லைப் கேங்ஸ்டர் திரைப்படமாக அமைந்துள்ளது.
கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். ஒரு கேங்ஸ்டரின் பயணம், அவனது பிரச்சனைகள், மற்ற கேங்ஸ்டர்களுடனான மோதல்கள் என அனைத்தையும் அவர் திரையில் உயிர்ப்பித்துள்ளார்.
சிலம்பரசன் (அமர்) தனது கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். ஆரம்பத்தில் ஹீரோவா, வில்லனா எனத் தெரியாத அளவுக்கு அவரது நடிப்பு அமைந்துள்ளது. குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளிலும், துப்பாக்கி சூடு காட்சிகளிலும் மிரட்டிவிட்டார் என்றே சொல்லலாம்.
நாசர்து துணை கதாபாத்திரத்தில் தனது பெஸ்.ட் கொடுத்து இருக்கிறார். ஜோஜு ஜார்ஜ் வில்லனாக நடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரத்திற்கு போதுமான வலு இல்லை என்பது சற்று ஏமாற்றமளிக்கிறது. திரிஷா, அபிராமி, மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் தங்களது பங்களிப்பை அழகாக வழங்கியுள்ளனர்.
மணிரத்னத்தின் படங்களுக்கு உரியவாறு, தக்லைப் திரைப்படமும் ஒளிப்பதிவு, கலை இயக்கம், மற்றும் பின்னணி இசை ஆகியவற்றில் முத்திரை பதித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.
நெகடிவ்
தக்லைப் திரைப்படம் மணிரத்னத்தின் முந்தைய படங்களான தளபதி, நாயகன் ஆகியவற்றை நினைவூட்டினாலும், வில்லன் கதாபாத்திரம் சற்று பலவீனமாக இருப்பது குறையாக உணரப்படுகிறது.
மணிரத்னத்தின் படங்களில் பொதுவாக வலுவான வில்லன் கதாபாத்திரங்கள் இருக்கும், ஆனால் இந்தப் படத்தில் அது திருப்தி அளிக்கவில்லை. மேலும், வசனங்கள் குறைவாகவே இருப்பது மணிரத்னத்தின் பாணியாக இருந்தாலும், சிலருக்கு இது ஒரு குறையாகத் தோன்றலாம்.
பாசிட்டிவ் :
தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் மிக உயர்ந்த தரத்தில் உள்ளது.
ஒளிப்பதிவு, கலை இயக்கம், மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை ஹாலிவுட் பாணியில் திருப்தி அளிக்கின்றன.
படத்தின் காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை ஆகியவை பார்வையாளர்களை கட்டிப்போடுகின்றன.