சூர்யா – ஜோதிகா:
கோலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர் சூர்யா – ஜோதிகா. இவருடைய மகள் தியா மும்பையில் படித்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
இவர், “Leading Light – The Untold Stories of Women Behind the Scenes” என்ற ஆவண படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படம் Triloka International Filmfare Awardsல் திரையிடப்பட்ட நிலையில், அதற்கு இரண்டு விருதுகள் கிடைத்து உள்ளது . இந்த விஷயத்தை சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் பெருமிதத்துடன் பதிவிட்டு இருக்கின்றனர். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.