Monday, March 2, 2026

சொர்க்கவாசல் : திரைவிமர்சனம்!!

சொர்க்கவாசல்

காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து த்ரில்லர் கதை அம்சம் கொண்ட ரன் பேபி ரன் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் தற்போது ஆர் ஜே பாலாஜி க்கு வித்தியாசமான முயற்சியாக இந்த சொர்க்கவாசல் படம் அமைந்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கி இருக்கிறார். மேலும் இப்படத்தில் செல்வராகவன், நட்டி நடராஜன், ,கருணாஸ், சானியா அய்யப்பன் எனப் பல பிரபலங்கள் படத்தில் நடித்துள்ளனர். இன்று வெளியாகி இருக்கும் சொர்க்கவாசல் படத்தின் விமர்சனம் தொடர்பாக பார்க்கலாம் வாங்க..

திரைக்கதை:

கடந்த 1999-ம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் கலவரம் வெடித்து பல உயிர்கள் பலியாகின்றன. இந்த வழக்கை இஸ்மாயில் (நட்டி நடராஜன்) விசாரணை செய்கிறார். அந்த மத்திய சிறையில் ரவுடியாக இருக்கிறார் சிகா (செல்வராகவன்).

இந்தச் சூழலில், தான் செய்யாத குற்றத்துக்காக உள்ளே வருகிறார் பார்த்திபன் (ஆர்.ஜே.பாலாஜி). சிறைக்கு வந்ததுமே பல துன்பங்களுக்கு ஆள் ஆகுகிறார். இப்படி கொடுமைகளை அனுபவதிக்கு கொண்டு இருக்கும் போது சிறையில் பெரிய கலவரம் வெடிக்கிறது. இதில் எதற்கும் தொடர்பில்லாத பார்த்திபன் கூண்டில் மாட்டிய கிளியாக சிக்கித் தவிக்கிறார்.அந்த பிரச்சனையில் இருந்து பார்த்திபன் தப்பித்தாரா? இல்லையா என்பதே படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?

வடசென்னை,விசாரணை படங்களில் சிறை வாழ்க்கையை காட்டியது போல சொர்க்கவாசல் படத்தில் சித்தரித்திருக்கிறார் இயக்குநர் சித்தார்த். கடந்த 1999ம் ஆண்டு சிறையில் நடைபெற்ற கலவரத்தை மையமாக வைத்து சொர்க்கவாசல் திரைப்படம் அமைந்து இருக்கிறது. விசாரணை கமிஷனராக நடித்துள்ள நட்டி நட்ராஜ், சிறை காவலராக நடித்திருக்கும் கருணாஸ் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் வில்லனாக நடித்திருக்கும் செல்வராகவன் நன்றாக நடித்திருந்தாலும் சில இடங்களில் நடிப்பில் சொதப்பிவிட்டார் என்றே சொல்லலாம்.

சிறையில் நடக்கும் சண்டைக் காட்சிகள், திருநங்கைகளுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் நடக்கும் பாலியல் தொந்தரவுகள், தனிமனிதன் சிறையில் அனுபவிக்கும் கொடுமை, அதிகார துஷ்பிரயோகங்கள், நேர்மை எனப் பலவிஷயங்களை ஒரே படத்தில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

முதல் பாதியில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், அதன் சஸ்பென்ஸை ஒளித்து வைத்தது நான்-லீனியர் முறையில் கொண்டு சென்ற விதம் கொஞ்சம் சுவாரசியமாக அமைந்தது. ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் நல்லா நடிக்க முயற்சி செய்து இருக்கிறார் இருப்பினும் அவருக்கு இன்னமும் பயிற்சி தேவை என்ற எண்ணம் வருகிறது.

பாசிட்டிவ்:

உண்மை சம்பவங்களை படத்தில் தத்துரூபமாக காட்டி இருக்கிறார்.

படத்தில் இடம்பெற்றுள்ள சஸ்பென்ஸ் படத்தை சுவரசியாமாக கொண்டு செல்கிறது.

நெகடிவ்

சில இடங்களில் தொய்வு..

முதல் பாதிக்கு இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..

மொத்தத்தில் சொர்க்கவாசல் திரைப்படம் இந்த ஆண்டில் நல்ல படங்களில் ஒன்றாக இருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles