மாமன்
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடித்து வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர், தற்போது அவரது நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
இதில் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் எனப் பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த வாரம் OTT தளங்களில் வெளியான தமிழ் டப்பிங் படங்கள், சீரிஸ்.. முழு விவரம் இதோ!!
வசூல்
குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள மாமன் திரைப்படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படம் வெளியாகி 5 நாட்களில் இதுவரை ரூபாய் 18 கோடி வரை வசூல் செய்து இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.