சிம்ரன்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், தனது 30 ஆண்டு கலைப் பயணத்தை கொண்டாடும் வகையில் JFW விருது விழாவில் கௌரவிக்கப்பட்டார். அந்த விழாவில் பேசிய அவர், சமீபத்தில் நான் என்னுடைய சக நடிகைக்கு, உங்களை அந்த ரோலில் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மெசேஜ் செய்தேன். அதற்கு அந்த நடிகை, ஆன்ட்டி ரோலில் நடிப்பதைவிடவும் டப்பா மாதிரியான ரோலில் நடிக்கலாம்” என்று கூறினார். அந்த மெசேஜ் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. டப்பா ரோலில் நடிப்பதைவிட ஆன்ட்டி ரோலில் நடிப்பது மேல் என்று சிம்ரன் தெரிவித்து இருந்தார்.
சர்ச்சை:
சமூக வலைதளங்களில், இந்த விமர்சனம் ஜோதிகாவை குறிப்பிடுவதாக ஒரு தரப்பும், லைலாவை குறிப்பிடுவதாக மற்றொரு தரப்பும் விவாதித்து வருகின்றனர். இந்த சர்ச்சை, தமிழ் சினிமாவின் 90கள் மற்றும் 2000களின் முன்னணி நடிகைகளின் போட்டி குறித்த பழைய நினைவுகளை மீண்டும் கிளறியுள்ளது.
சினிமாவில் போட்டி?
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், இந்த விவரம் தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், சிம்ரனின் கருத்து ஜோதிகாவை நோக்கி இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர். காரணம், சிம்ரனும் ஜோதிகாவும் ஒரே காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள். இருவருக்கும் இடையே ரசிகர்கள் மத்தியில் ஒரு மறைமுக போட்டி இருந்ததாகவும், ‘மாயவி’ படத்தில் சிம்ரனின் பாடல் காட்சியை ஜோதிகா விமர்சிப்பது போன்ற ஒரு காமெடி காட்சி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.
ஆனால், மற்றொரு தரப்பு, லைலாவாக இருக்க வாய்ப்பில்லை என்கிறது. லைலா இப்போது சினிமாவில் மிகவும் அமைதியாக இருக்கிறார். அவர் இப்படி ஒரு விமர்சனத்தை செய்ய வாய்ப்பில்லை
சிம்ரனின் பேச்சு, மேடையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதற்காகவா அல்லது உண்மையான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒரு அக்கறையான கருத்தாக இருக்கலாம். ஒரு நடிகையாக, தன்னுடைய சக நடிகை இன்னும் முன்னணி ரோல்களில் நடிக்கலாமே என்று சிம்ரன் நினைத்திருக்கலாம். ஆனால், இதை பொறாமை அல்லது விமர்சனமாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
“சிம்ரனோ, ஜோதிகாவோ, இருவருமே தனியாக சினிமாவில் போராடி வெற்றி பெற்றவர்கள். ஆரம்ப காலத்தில் இருவரும் பல சங்கடங்களை எதிர்கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு சிறிய விஷயத்தை பெரிதாக்கி, அவர்களை எதிரெதிராக நிறுத்துவது தேவையில்லை என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.