சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கிறார் சிம்பு. சமீபத்தில் அவருடைய பிறந்த நாள் முன்னிட்டு STR 49, STR 50 படங்களின் அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைப் படம் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் தயாரிப்பாளரும், சினிமா விமர்சகருமான ஆஸ்கர் பாலாஜி பிரபு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நடிகர் சிம்பு STR 50 படத்திற்காக தான் முடி அதிகமாக வளர்த்திருந்தார். அதன் பின் மணிரத்னம் தக் லைப் படத்தில் நடிக்க அழைத்ததும் அங்கு சென்றுவிட்டார்.
தக் லைப் படத்தில் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கும் போது சிம்புவிடம் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க மணிரத்னம் கேட்டு இருந்தார். ஆனால் இப்போது கதையில் பல விஷயங்களை மாற்றியுள்ளனர். சிம்புவின் கதாபாத்திரத்தை முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளனர். இப்போ மல்டி ஸ்டார் படம் என்பதால் படத்தின் மார்க்கெட் அதிகமாகி இருக்கிறது. இப்போ எல்லாம் எங்க நல்ல பான் இந்திய படங்கள் வருகிறது.
நடிகர் கார்த்தி எல்லாம் அங்கு சென்று தெலுங்கில் பேசி கொண்டு இருக்கிறார். சுஹாசினி ஒரு படி மேல் சென்று பொன்னியின் செல்வன் படத்தை உங்களுக்காக எடுத்த படம் என்று சொல்கிறார். தில் ராஜு இங்க வந்து பாட்டு இருக்கு டான்ஸ் இருக்குனு பேசிட்டு இருக்கிறார். இதெல்லாம் ப்ரோமோஷனுக்காக செய்கிறார்கள்.
STR 49 படம் குறுகிய கால படைப்பாக இருக்கும். இப்படம் பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கவுள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
STR 50 படத்தை சிம்பு தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால் தயாரிப்பாளர் மாற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இந்த படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. STR 51 படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருப்பதாக அறிவித்தனர். இந்த படத்தில் சிம்பு கடவுள் கதாபாத்திரத்தில் நடிப்பதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. சிம்பு நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். சிம்பு குறித்து எந்தவொரு தகவல்களும் இல்லாத காரணத்தால் பிறந்த நாளில் எல்லா படத்தின் அப்டேட்களையும் அறிவித்துவிட்டனர்.
STR 50 படத்தில் சிம்பு மூன்று ரோல்களில் நடிக்கிறார். பாகுபலி போன்று படம் இருக்காது. படம் முழுக்க முழுக்க தமிழ் மண் சார்ந்து இருக்கும். பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ லாஞ்சில் சிம்பு வந்ததும் ரசிகர்கள் ஆர்பரித்தார்கள். சிம்பு மீது ரசிகர்கள் அதிக பாசம் வைத்துள்ளனர். விஜய் இடத்தை பிடிக்க சிம்புக்கு தகுதி இருக்கிறது.