வடிவேலு:
தமிழ் சினிமாவில் டாப் காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் வடிவேலு. இவர் ஹீரோவாக நடித்த படங்களுக்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர். பிஸி நடிகராக இருந்த வடிவேலு, சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலமாக மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.ஆனால் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஓபன் டாக்:
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல இயக்குனர் வி சேகர் நடிகர் வடிவேலு பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், வடிவேலு புது கார் வாங்கி கவுண்டமணி, செந்தில் இடிக்கிற மாதிரி வந்து நிப்பாட்டினார். எல்லாத்தை விட விலை உயர்ந்த காரை வைத்திருக்கிறேன் என்று காட்டிக்கொள்கிறார். படத்தில் இருந்து வடிவேலு நீக்குமாறு கவுண்டமணி சொன்னார். சமயத்தில் அட்வான்ஸ் கொடுத்துவிட்டேன். அதனால் அடுத்த படத்தில் அவரை நீக்கிவிடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் கவுண்டமணி வேறொரு படத்திற்கு சென்றுவிட்டார்..அதே போல செந்தில் பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன் பின்னர் விவேக் – வடிவேலு கம்போ வந்தது. இருவருமே நண்பர்களாக தான் இருந்தார்கள். ஆனால் கூட இருக்கிறவர்கள் இருவருக்குமே சண்டையை மூட்டிவிடுவார்கள். வடிவேலு சில படங்கள் நடித்த பிறகு 30 லட்சம் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிட்டார்.
வடிவேலு கோவை சரோலா கம்போவை காட்டிலும் விவேக் – சரோலா கம்போவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதனால் தொடர்ந்து பல படங்களில் இணைந்து பணியாற்றினார்கள்.
என்னுடைய படத்தில் எப்போதுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் கொடுப்பேன். ஐஸ்வர்யா, பானு பிரியா, குஷ்ப எனப் பல நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். எம்.ஜி. ஆர் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். 7 வயதில் துணை கதாபாத்திரங்களில் நடித்து கடைசியில் பெரிய இடத்திற்கு வந்தவர். அதனால் அவர் எப்போதும் உழைக்க வேண்டும் என்று தன்னுடைய படங்களில் சொல்லிக்கொண்டே இருப்பார்.
நாங்கள பண்ணையார் குடும்பம் நல்ல வசதி இருந்தது ஆனால் என்னுடைய அப்பா ரேஸ் விட்டு பல பணத்தை அழித்தார். இதனால் என்னுடைய வறுமைக்கு தள்ளப்பட்டது. நான் ஸ்கூல் போகும் போது என்னுடைய ஆசிரியரிடம், பையன் ஒழுங்ப படிக்கலான கூட பரவாயில்லை. ஆனால் ஒழுக்கமாக இருக்கனும் என்று அம்மா சொன்னார். சினிமாவுக்கு வந்த பிறகு புரட்சிகரமான படங்களைஎடுத்தேன். புகுந்த வீடா பொறந்த வீடா படத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வி சேகர் படங்கள் என்றாலே பெண்களுக்கான படம் என்று சொல்ல ஆரம்பித்தார். இதனால் நானும் பல முன்னணி நடிகைகளை படத்தில் நடிக்க வைத்தேன் என்று வி சேகர் தெரிவித்துள்ளார்.