தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சந்தானம் மற்றும் சூரி தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளனர். சூரி ஹீரோவாக நடித்து படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்றும் வரும் நிலையில், சந்தானத்தின் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சந்தானம் vs சூரி
இந்நிலையில் சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான மாமன் திரைப்படம் 16ம் தேதி வெளியானது. இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் ஸ்வாசிகா, ராஜ்கிரண் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியான அதே தினத்தில் சந்தானம் நடிப்பில் உருவான DD Next Level திரைப்படம் வெளியானது. இப்படத்தை எஸ். பிரேம் ஆனந்த் இயக்கி இருந்தார். இந்த படத்தில் கீதிகா டிவாரி, கவுதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
வெற்றி யாருக்கு?
பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும், “DD Next Level” எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. ஆனால் மாமன் படம் சூரியின் ஹ்யூமர் மற்றும் படத்தின் கதை அம்சம் மக்களுக்கு ரசிக்கும் படி அமைந்து இருந்தது. “DD Next Level” சந்தானத்தின் வழக்கமான நகைச்சுவை பாணியில் இருந்ததால் சுவாரஸ்யத்தை கொடுக்க தவறிவிட்டது.
விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!! இதோ..
வசூல்
தற்போது படம் வெளியாகி 8 நாட்களை கடந்துள்ள DD Next Level மற்றும் மாமன் திரைப்படம், அதன் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது.
8 நாட்கள் முடிவில்:
மாமன்: ₹24 கோடி
DD Next Level: ₹13.5 கோடி