Wednesday, March 4, 2026

சந்தானம் சிவகார்த்திகேயன் மீது இருக்கும் ஈகோ.. உண்மையை உடைத்த பிரபலம்!!

சந்தானம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சந்தானம். அதன் பின் இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த மன்மதன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடியான நடித்து கோலிவுட்டில் டாப் காமெடி நடிகராக மாறினார். பீக்கில் இருந்த சந்தானம் ஹீரோ அவதாரம். ஆனால் அவர் நடித்த பல படங்கள் தோல்வியை தான் தழுவியது. பல ஆண்டுகள் கழித்து வெளியான மத கஜ ராஜா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் சந்தானம் காமெடியனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 45

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், சூர்யா 45 படம் பாதியில் நிறுத்தப்பட்ட காரணம் அலட்சியத்தால் தான். எவ்ளோ பெரிய நடிகராக இருந்தாலும் எங்க சென்று படம் ஷூட்டிங் எடுக்கிறோமோ அங்க அனுமதி பெற வேண்டும். இது கால காலமாக நடந்து வருகிறது. காவல் நிலையில் இது தொடர்பாக பேசினால் பிரச்சனை இல்லை. ஆனால் இவங்க நம்பள என்ன பண்ணப்போறாங்க என்று நினைக்கிறார்கள். கிராம புறம்சென்றால் கூலி வேளைக்கு செல்ல அங்க போய் அனுமதி வாங்க லைட் போட்டுகொண்டு போது மக்களுக்கு துந்தரவாக இருக்கும்.

விஷால் படத்தில் சந்தானம் காமெடியானாக நடிக்க இருக்கிறார். மத கத ராஜா படம் வெற்றி பெற முக்கிய காரணமே சந்தானம் தான். இந்தபடத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் சுந்தர் சி சந்தித்தாகவும், அந்த படத்தில் சந்தானம் இரண்டாம் ஹீரோவாக வருவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அவருக்கு மிக பெரிய சம்பளத்தை கொடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எல்லா படங்களில் காமெடியானாக சந்தானம் நடிக்க மாட்டார். விஷால் சுந்தர் சி வற்புறுத்தி கூப்பிட்டதால் தான் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் vs சந்தானம்

சிவகார்த்திகேயன் சந்தானம் இடையே கட்டாயம் ஈகோ இருக்கும். சந்தானம் ஹீரோவாக நடித்த படம் பெரிய அளவில் ஓடவில்லை ஆனால் சிவகார்த்திகேயன் படங்கள் நல்ல ஓடியது. அமரன் மாதிரியான படங்களில் சந்தானம் நடிக்க முடியுமா.சந்தானம் என்றால் அப்படி தான் டூயுன் ஆகிட்டோம். காமெடி ரோல் இல்லாமல் சந்தானம் சீரியஸ் ஆன ரோலில் நடித்திருந்தார். அந்த படம் மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது. சிவகார்த்திகேயன் மாதிரி சந்தானம் ஆகணும் என்று நினைத்தது உண்மை தான் என்று சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles