சாம் சி.எஸ்:
இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக மாறியிருக்கிறார் சாம் சி.எஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாம் சி.எஸ் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், இந்த பொங்கல் தினம் அன்று என்னுடைய இசையமைப்பில் மட்டும் மூன்று திரைப்படங்கள் வெளியானது. அதிலும் இரண்டு தமிழ் படங்கள் ஒன்று மலையாளம் படம்..ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. கல்லூரி படிக்கும் பாலா சார் படங்களை பார்த்து வியந்திருக்கிறேன். அவரை எனக்கு ரொம்ப புடிக்கும். அவருடைய வணங்கான் படத்திற்கு இசையமைத்திருந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலா சார் என்னிடம், “நான் படத்தில் நிறைய கரெக்ஷன் சொல்லுவேன். இளையராஜா சாரிடம் பணியாற்றும் போது கூட நிறைய கரெக்ஷன் சொல்லி இருக்கிறேன். ஆனால் இதுவரை கரெக்ஷன் சொல்லாத ஆள் நீ மட்டும் தான்” என்று சொன்னனர். அது ரொம்ப எனக்கு பெருமையாக இருந்தது.

complete composers:
என்னுடைய ஹிட் பாடல்கள் அனிருத் பாடியிருப்பார். அவர் என்னுடைய நல்ல நண்பர். அதனால் எல்லாரும் அந்த பாடல்கள் அவரு பண்ணாத நிறைய பேர் நினைப்பார்கள். ‘கண்ணம்மா உன்ன’.., ‘கண்ணே கண்ணே’.. போன்ற பாடல்களை அனிருத் தான் பண்ணார் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நான் ஒரு complete composers -ஆக நினைக்கிறேன். ஏன்னென்றால் நான் புஷ்பா போன்ற கமெர்ஷியல் படம் பண்றேன். அதன் பாலா சாரின் வணங்கான் படத்திற்கு பண்றேன். இரண்டும் வேற வேற கதைக்களங்களை கொண்டது.
என்னால் மற்ற இசையமைப்பாளர்கள் மாதிரி இசையமைக்க முடியாது. மற்றவர்கள் போல ஆக நினைத்தால் தோல்வி அடைவோம். இளையராஜா சார் ஏ.ஆர் ரகுமான் சார் ரொம்ப பிடிக்கும், அப்பறம் என்னுடைய கல்லூரி காலத்தில் யுவனை பிடிக்கும். இவர்களை போல ஆகனும் வரல.. இவங்க கிட்ட இருக்கிற பெஸ்ட் எடுத்துக்கவேண்டும் அவ்ளோ தான். நான் எப்போதும் அனிருத் மாதிரி ஆக முடியாது. அவரும் என்னை போல ஆக முடியாது. அனிருத் இப்போ புதுசா பண்ணல, இங்க யாருமே புதுசா பண்ணவில்லை. எல்லாரும் ஒரு ஒருவர் கிட்ட இருந்த கற்றுக்கொள்கிறோம்.

அருண் காமராஜ் என்கூட தான் படம் பண்ணாரு. இப்போது வேறொரு இசையமைபாளரிடம் பணியாற்றுகிறார். அந்த விஷயத்தை என்கிட்ட சொல்லிவிட்டு தான் போனார். இப்படி அந்த படத்திற்கு நான் பிட்டா இருப்பேன் தெரிந்து அவர்களே என்னை அழைக்கிறார்கள். நானே எங்கயும் வாய்ப்பு தேடி போனதில்லை. புஷ்பா படத்தின் background score 13 நாட்களில் செய்துமுடிக்குமாறு அந்த படத்தின் தயாரிப்பாளர் சொன்னார். நான் அதிர்ச்சியாகிவிட்டேன். அந்த படத்தை எடுக்கலாமா? வேண்டாமா? என்று குழப்பத்தில் இருந்தேன். இந்த படம் பண்ண இந்திய அளவில் எந்த படமும் சாம் சி.எஸ் பண்ணுவார் என்ற பெயர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் படம் பண்ணேன் என்று சாம் சி.எஸ் கூறியுள்ளார்.



