துணிவு:
துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடித்திருக்கும் படம் தான் விடாமுயற்சி. சுமார் இரண்டு வருடங்களாக இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி இருந்தார். இதில் முக்கியமான ரோலில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது.

ரெஜினா கசாண்ட்ரா:
தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தமிழ் சினிமாவில் சில வெற்றி படங்கள் கொடுத்து இருந்தாலும் சரியான பட வாய்ப்பு இவருக்கு கோலிவுட்டில் அமையவில்லை. இதனால் இவர் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது இவர் அஜித்தின் துணிவு படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ரெஜினா, விடாமுயற்சி படம் தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர், இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். விடாமுயற்சி முழு படத்தை வெளிநாடுகளில் தான் எடுத்தோம். மகிழ்திருமேனி சார் செட்டை அருமையாக வைத்துக்கொள்வார். அந்த விஷயம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வந்த பிறகு அஜித் சார் உடல்நிலை சரியில்லை. ஏனென்றால் நிறைய ஆக்ஷன் காட்சிகள் எடுத்து இருந்தனர். நானும் அர்ஜுன் சார் கொஞ்சம் லேட் ஆகி ஷூட் வந்தோம். என்னுடைய பிறந்த நாளில் அஜித் சார், உங்களுக்கு என்ன பிடிக்கும்? என்று கேட்டார். நானும் shoe பிடிக்கும் என்றும் சொன்னேன். ஷூட்டிங் முடித்துவிட்டு ரூம் க்கு வரும் போது shoe இருந்தது. அதன் பின்னர் இரண்டு நாள் அஜித் சாரை பார்க்கவில்லை. அஜித் சார் அந்த shoe வாங்கி கொடுத்தார் என்று ஆரவ் கூறினார். நான் அதிர்ச்சி ஆகிவிட்டேன். விடாமுயற்சி படத்தின் ஆக்ஷன் காட்சிகள் எடுத்த பின்னரே நான் வந்தேன். அஜித் சாரிடம் சார் விபத்து தொடர்பாக பேசினேன். அவர் வலியை காட்டிக்கொள்ள மாட்டார்.
மேலும் அவர் பேசுகையில், லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் என்னுடைய கேரவனுக்கு வந்த சீன் பேப்பரை வசித்து என்னிடம் சொல்லுவார். அது எண்ணமும் ஞாபகம் இருக்கிறது. அந்த படம் இவ்ளோ பெரிய சூப்பர் ஹிட் ஆகும் என்று நினைக்கவில்லை. இணைக்கு வரை மாநகரம் படத்தை குறித்து பேசுகிறார்கள். லோகேஷ் கனகராஜின் இந்த வளர்ச்சி மிகவும் பிடித்து இருக்கிறது சினிமா பின்புலம் இல்லாமல் இந்த நிலைமைக்கு வருவது மிகவும் கஷ்டம் என்று ரெஜினா தெரிவித்துள்ளார்.




